• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

by Tamil2daynews
April 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Vels Film International Dr. ஐசரி  K கணேஷ் வழங்கும்,
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,
சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

 

சிலம்பரசன் TR நடிக்கும், Vels Film International Dr. ஐசரி  K கணேஷ் தயாரிப்பில் உருவாகும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக  நிறைவு பெற்றது.

பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர்.-ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’  திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்க நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது, அவரது வாழ்க்கை மும்பைக்கு சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிலம்பரசன் டி.ஆரின் காதலியாக சித்தி இதானி நடிக்கிறார். நீரஜ் மாதவ் (ஃபேமிலி மேன் புகழ்), ராதிகா சரத்குமார் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து  நடிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழுவில் சித்தார்த்த நுனி (ஒளிப்பதிவு), அந்தோணி (எடிட்டர்), ராஜீவன் (தயாரிப்பு வடிவமைப்பு), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர் (சண்டைப்பயிற்சி இயக்குனர்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேன் ஜி, S.அழகியகூத்தன் ( ஒலி வடிவமைப்பு), ஹபீஸ் (உரையாடல் பதிவாளர்), மற்றும் ஜெயமோகன் (எழுத்தாளர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Vels Film International விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பையும், இசை, டிரெயலர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

Previous Post

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை

Next Post

ஆம்ரோ சினிமாஸ் தயாரிக்கும் முதல் பிரமாண்ட படம் ‘RAT’

Next Post

ஆம்ரோ சினிமாஸ் தயாரிக்கும் முதல் பிரமாண்ட படம் 'RAT'

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.