ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆம்ரோ சினிமாஸ் தயாரிக்கும் முதல் பிரமாண்ட படம் ‘RAT’

by Tamil2daynews
April 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆம்ரோ சினிமாஸ் தயாரிக்கும் முதல் பிரமாண்ட படம் ‘RAT’

 

பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது. அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் “RAT” என்கிற படம் உருவாகிறது.
விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன.  தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள்.  அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் – எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும். இது உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது.  இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா ? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் RAT.

ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் அவர்கள் தயாரிக்கிறார்.  இதை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் இவர் சசிகுமார் ,அட்டகத்தி தினேஷ் படத்தில் நாயகியாக நெட்பிளிக்ஸ்காக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் சாயா தேவி நடிக்கிறார் சாயா தேவி போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கன்னிமாடம் படத்தின் நாயகி இவர் இவர்களைத் தவிர கன்னிகா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர் .
படத்திற்கு ஒளிப்பதிவு சீனிவாஸ் தேவாம்சம் .இவர் பி.சி ஸ்ரீராம் பாசறையில் இருந்து வந்தவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பணிபுரிந்து வருபவர்.   வசனம் கருந்தேள் ராஜேஷ். இவர் திரைப்படத்துறை சார்ந்து பல   நூல்களை எழுதியவர்.  இன்று நேற்று நாளை, அயலான், சூது கவ்வும் முதலிய பல வெற்றிகரமான திரைப்படங்களில் திரைக்கதையில் பணிபுரிந்தவர்.  இசை அஸ்வின் ஹேம்நாத். இவர் ‘ஆற்றல் ‘படத்தின் இசையமைப்பாளர். இப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுதுகிறா. படத்தொகுப்பு இக்னேசியஸ் அஸ்வின். இவர்  ‘கடைசீலபிரியாணி ‘  ,’ பீட்ஸா 3′ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர்.  . கலை இயக்கம் முஜிபுர் ரஹ்மான் . இவர் ‘உடன்பிறப்பே’ படத்திற்குக் கலை இயக்கம் செய்தவர்.  இணை தயாரிப்பாளர் நேரு தாஸ், நிர்வாக தயாரிப்பு கார்த்திக்
‘RAT’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Previous Post

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது !

Next Post

சினிமாவில் நான் சம்பாதித்தது இயக்குனர் ராம்நாத் தான். நடிகர் கருணாஸ் புகழாரம்..!

Next Post

சினிமாவில் நான் சம்பாதித்தது இயக்குனர் ராம்நாத் தான். நடிகர் கருணாஸ் புகழாரம்..!

Popular News

  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

July 5, 2022

SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

July 4, 2022

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

July 4, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.