
தமிழ்சினிமாவில் எப்படி விஜய் அஜித், ரஜினி கமல் என்று சொல்கிறார்களோ அதே போல தான் சிம்பு-தனுஷ். ஒருகாலத்தில் தனுஷை விட சிம்பு முன்னணியில் இருந்தார். ஆனால் அதனை சோம்பேறித்தனத்தால் படங்களில் நடிக்க முட்டுக்கட்டை போட்டார் சிம்பு.
அந்த நிலைமையை பயன்படுத்தி தொடர்ந்து படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு மார்க்கெட்டை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வைத்துள்ளார் தனுஷ். இருந்தாலும் சிம்புவுக்கு இப்பவும் மாஸ் குறையாத ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இருவருமே நண்பர்கள் என்றாலும் படங்களின் மூலம் போட்டிப் போட்டுக் கொள்வோம் என மேடைகளில் கூட கூறியுள்ளனர். ஆனால் தற்போது அனைவரும் எதிர்பார்க்காத வகையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக விஷால் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெள்ளை ராஜா கருப்பு ராஜா என்ற படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது அதை ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிஷ்கின் இந்த படத்தை கையில் எடுத்துள்ளார். மேலும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் மிஷ்கின் மற்றும் விஷால் ஆகிய இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவர் ஐசரி கணேஷ் என்பதால் அவரும் ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.