வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை. முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ மொக்க படத்தில் தான். ஆனால் அவரது நல்ல நேரம் அடுத்ததாக நடித்த சீக்கிர நடிகரின் படம் முன்னாடியே ரிலீஸ் ஆகிவிட்டது.
முதல் படத்திலேயே தனது சிரிப்பாலும் கொழு கொழு உடல் அமைப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு வெகு விரைவிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு மற்ற நடிகைகளை ஆட்டம் காண வைத்தார்.
வெறும் அழகை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவில் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னவர்கள் மத்தியில் பழைய நடிகை ஒருவரின் வரலாற்று படத்தில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்துக் காட்டினார்.
அதன்பிறகு நடிகைக்கு பாலிவுட் ஆசை ஒட்டிக்கொள்ள ஒரு படத்துக்காக அநியாயத்துக்கு உடலை குறைத்து கொரானா வைரஸ் தாக்கியவரை போலாகிவிட்டார் அந்த அம்மணி. அதன்பிறகு அவரை ஏறெடுத்து கூட பார்க்கவில்லையாம் ரசிகர்கள்.
படவாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்த வாரிசு நடிகை, சரி இனி கிளாமர் காட்டி பிழைத்து கொள்ளலாம் என அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், நான் கிளாமருக்கு ரெடி என கூறியுள்ளார்.
ஆனால் தயாரிப்பாளர்களும் முன்னாடி மாதிரி கொழு கொழு உடல் அமைப்புடன் இருந்திருந்தால் நாங்களே வாய்ப்பு கொடுத்து இருப்போம். இப்படி எலும்பு தோலுமாக மாறி கிளாமர் காட்டினால் யார் பார்ப்பார்கள் என கைவிரித்து விட்டார்கள்.
தற்போது தன்னுடைய சொந்த மண்ணில் ஒரு சரித்திர படத்தை மட்டும் நம்பி எதிர்பார்த்து காத்திருக்கிறார் அந்த நாயகி. அதற்குள் பழையபடி உடம்பை ஏற்றி விட வேண்டும் என அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
அடுத்து ஸ்பீட் இயக்குனருடன் ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அங்கேயும் இதே கண்டிஷன் தான். கும்முன்னு இருந்தா வா, இல்லைனா கம்முனு போ எனக் கூறி விட்டார்களாம்.
தற்போது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக பாலிவுட்டை நம்பி தன்னுடைய சினிமா வாழ்க்கையை இழந்து விட்டோமே என கவலையில் உள்ளாராம்.