• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மார்க் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
January 2, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மார்க் – விமர்சனம் 

 

கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கையகப்படுத்தப்படுகிறது.

அது கொல்ஹாபூரில் டானாக இருக்கும் பத்ரா (நவீன் சந்திரா) உடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது முதல்வரின் மகனுடன் தொடர்புடைய ஸ்டீபன் ராஜுடையது (குரு சோமசுந்தரம்) என்பதும் பின்னர் தெரிய வருகிறது

SP அஜய் மார்கண்டேயா எனும் மார்க் அந்த போதைப்பொருளை தனது கன்ட்ரோலில் எடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, முதல்வர் ICUவில் சீரியஸாக இருக்க, அவரது மகன் ஆதிகேசவா (ஷைன் டாம் சாக்கோ) தன்னை முதல்வராக்க கையெழுத்திடுமாறு கேட்கிறார்.ஆனால், கட்சியில் மூத்தவருக்குதான் பதவி கொடுக்க வேண்டும் என அவர் கூற, தாயை கொன்றுவிட்டு ஆதிகேசவனே அவரது கையெழுத்தை போட்டுக் கொள்கிறார்.

முதல்வரை அவரது மகன் கொலை செய்ததை ரகசிய செல்போன் மூலம் டாக்டர் ஒருவர் வீடியோ எடுக்க, அந்த விஷயம் ஆதிகேசவனுக்கு தெரிய வருகிறது. அந்த வீடியோ வெளியேற வரக்கூடாது என அவர் கைப்பற்ற முயற்சிக்க, மங்களூருவின் பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.இப்போது களத்தில் இறங்கும் SP மார்க் குழந்தைகளை காப்பாற்றினாரா? முதல்வர் கொலை தொடர்பான வீடியோ என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

மேக்ஸ் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கிச்சா சுதீபா மற்றும் விஜய் கார்த்திகேயா இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக கொடுக்க நினைத்த இயக்குநர், 5 சண்டைப்பயிற்சி இயக்குநர்களை வைத்து இயக்கி மிரட்டியிருக்கிறார்.

குறிப்பாக காவல் நிலையத்தில் வரும் சண்டைக்காட்சியும், பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சியும் ரொம்ப ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் சண்டைக்காட்சி பொறி பறக்க, கிளைமேக்சில் சுதீபா உக்கிரத்தை காட்டியுள்ளார். ஆகையால், ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு இப்படம் செம விருந்து என்றே கூறலாம்.
Mark wrapped up: Kiccha Sudeep’s next with Max maker Vijay Kartikeyaa on course for Christmas release
ஆனால், திரைக்கதையைப் பொறுத்தவரை நிறைய சுத்திவிட்டிருக்கிறார் இயக்குநர். கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க சுதீபாவிற்கு (மார்க்) 18 மணிநேரமே உள்ளது. அதற்கு அவர்களை கண்டுபிடிக்க முடியாவிடில் குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.

இதை மட்டுமே வைத்து ஹீரோவுக்கு மாஸ் காட்ட முடியாது என்பதால் முதல்வர் கொலை, போதைப்பொருள் கடத்தல் கும்பல் என உள்ளே கொண்டு வந்து திணித்திருக்கிறார். இதுவே படத்திற்கு மைனஸாக மாறி திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.

என்றாலும் கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான விஷயங்களும் படத்தில் உள்ளன. இரண்டு இடங்களில் வரும் ட்விஸ்ட் அட என்று சொல்ல வைக்கிறது. மேக்ஸ் படத்தையும் இயக்குநர் டீஸ் செய்திருக்கிறார். கிச்சா சுதீபாவைத் தாண்டி நல்ல கதாபாத்திரம் என்றால் விக்ராந்த் மற்றும் தீப்ஷிகா ஆகிய இருவருக்கும்தான்.அதிலும் போலீசாக வரும் தீப்ஷிகாவுக்கு என தனியாக மாஸ் சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளது. அதனை கச்சிதமாக அவர் செய்துள்ளார். மற்றபடி ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம் மற்றும் யோகி பாபு ஆகியோரின் கதாபாத்திரங்களில் அழுத்தம் இல்லை.

படத்தை தாங்கும் இன்னொரு தூண் என்றால் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தான். குறிப்பாக ‘மஸ்த் மலைக்கா’ பாடல் குதூகலம். கேமரா டீம், ஆர்ட் டிபார்ட்மென்ட், எடிட்டிங் ஆகிய மற்ற துறைகளின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

மொத்தத்தில் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது தியேட்டர்களில் விசில் சத்தம் காதை பிழைக்கின்றது .

ஆக்சன் பிரியர்களுக்கு இந்த புத்தாண்டில் மார்க் பிரியாணி விருந்து.
Previous Post

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் ‘திரெளபதி 2’ திரைப்படம் U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது!

Next Post

சல்லியர்கள் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

சல்லியர்கள் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.