• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

by Tamil2daynews
March 18, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் – ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.

இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்…ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.

மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
Imageபடத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் – கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.

வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. ‘லக்கி பாஸ்கர் ‘, மற்றும் ‘வாத்தி’ ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.

Teaser Link: https://www.youtube.com/watch?v=glU1Xc7dTKk
Previous Post

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

Next Post

‘எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது – டாப் ஸ்டார் பிரசாந்த்’

Next Post

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது - டாப் ஸ்டார் பிரசாந்த்'

Popular News

  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.