• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரையில் ஒரு துணிச்சலான சினிமா முயற்சி: Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ ) – விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் A.R. ரஹ்மான் இசையில் 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது !!

by Tamil2daynews
January 5, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரையில் ஒரு துணிச்சலான சினிமா முயற்சி:  Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ ) – விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் A.R. ரஹ்மான் இசையில் 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது !!

 

Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்”  திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”,  வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது.

சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது.

இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் அனைவரும் உரையாடல்களில்லாமல், முழுமையாக நடிப்பும் வெளிப்பாடும் மட்டுமே சார்ந்த கதையாடலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி போன்ற நடிகர்களுக்கு, ஒரு மௌன திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது, கலைநேர்மையையும் நடிப்பின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான, சவாலான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் இவர்களின் பங்கேற்பு, இந்த படத்தின் கலைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ், உரையாடல் இல்லாத நிலையிலும், மிக நுணுக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பின் மூலம், கதைக்கு மேலும் ஆழம் சேர்த்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, பின்னணியில் உழைத்திருப்பது A.R. ரஹ்மான் அவர்களின் இசை. காந்தி டாக்ஸ் படத்தில், பேசப்படாத வார்த்தைகளுக்குப் பதிலாக, ரஹ்மான் அவர்களின் இசையே உணர்ச்சிகளின் குரலாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாத இந்த உலகில், அவரது பின்னணி இசைதான் கதையாசிரியராக மாறி, பார்வையாளர்களை உணர்ச்சிப் பயணத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இந்த இசை, மௌனத்தை ஒரு வலுவான, ஆழமான அனுபவமாக மாற்றி, திரைப்படத்தை சர்வதேச தரம் கொண்ட, திரைப்பட விழாக்களுக்கு ஏற்ற படைப்பாக உயர்த்துகிறது.

திரைப்படத்தினைப் பற்றி இயக்குநர் கிஷோர் பெலேகர் கூறியதாவது:

“காந்தி டாக்ஸ்” என்பது மௌனத்தின் மீது வைத்த நம்பிக்கை. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்த இந்த வேளையில், அதன் அடிப்படை வடிவமான தூய நடிப்பும் உணர்ச்சியும் கொண்ட கதை சொல்லலுக்குத் திரும்ப விரும்பினோம். நடிகர்கள் அந்த வெளிப்படைத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். A.R. ரஹ்மான் அவர்களின் இசையே இந்த படத்தின் குரலாக மாறியது. Zee Studios மற்றும் மீரா சோப்ராவின் ஆதரவுடன், நாங்கள் ஒரு துணிச்சலான, நேர்மையான சினிமாவை உருவாக்க முடிந்தது.”

“காந்தி டாக்ஸ்” மூலம், சினிமாவின் மரபுகளை சவாலுக்கு உட்படுத்தும், புதிய கதை மொழிகளை உருவாக்கும், மதிப்புமிக்க படைப்புகளை ஆதரிக்கும் தனது உறுதியை Zee Studios மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

30 ஜனவரி 2026 அன்று வெளியாகும் “காந்தி டாக்ஸ்”, ஒரு வார்த்தையும் பேசாமல், உணர்வுகளுடன் பேசும் ஒரு அபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும்.
Previous Post

‘திரௌபதி 2’ திரைப்படத்தில் நடிகர் சிராக் ஜானி வில்லனாக நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது!

Next Post

“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு

Next Post

“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.