Monday, January 25, 2021
Tamil2daynews
Advertisement
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
    • பிற விளையாட்டுகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
    • பிற விளையாட்டுகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது

November 21, 2020
in சினிமா செய்திகள்
Reading Time: 2min read
0
சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’

இதுவரை யாரும் தொடாத சமூக பிரச்சனையை பேசும் ‘என் பெயர் ஆனந்தன்’

11 நிமிட பாடலுடன் நவ-27ல் வெளியாகும் ‘என் பெயர் ஆனந்தன்’

சந்தோஷ் பிரதாப் – அதுல்யா ரவி நடிக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’..! 
 
ஹாலிவுட் பாணி திரைக்கதையில் உருவான ‘என் பெயர் ஆனந்தன்’!

கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொணடு இந்தப்படம் உருவாகியுள்ளது… குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.

“திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப்படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன்.

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும்.

“இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

தற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப்படம் வரும் நவ-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.. ஓடிடி தளங்கள் இந்தப்படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.

“இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே நாங்கள் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தோம்.. முதலில் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது,  இரண்டாவதாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஒடிடிக்கு படத்தை தருவது என நாங்கள் முடிவு செய்தபடியே இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம்..” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

 நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விபரம்

நடிகர்கள்: சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் மற்றும் பலர் .பாடல்கள்:  புருஷோத்தமன், வீரையன்

படத்தொகுப்பு: விஜய் ஆண்ட்ரூஸ்

ஒளிப்பதிவு : மனோ ராஜா

இசை : ஜோஸ் பிராங்க்ளின்

டைரக்சன் : ஸ்ரீதர் வெங்கடேசன்

தயாரிப்பு : கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா

———————-

Yen Peyar Anandhan – Official Trailer

https://youtu.be/Jh-rOnYxAdM
ShareTweetSend

Related Posts

எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்  முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு 
சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்  முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு 

January 23, 2021
தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                           ஒருவனின் கதை “ முன்னா “       
சினிமா செய்திகள்

தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                          ஒருவனின் கதை “ முன்னா “       

January 23, 2021
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !
சினிமா செய்திகள்

நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !

January 23, 2021
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.
சினிமா செய்திகள்

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.

January 23, 2021
சென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு
சினிமா செய்திகள்

சென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு

January 23, 2021
MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.
சினிமா செய்திகள்

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

January 23, 2021
Next Post
‘அரண்மனை 3 ‘படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி!

'அரண்மனை 3 'படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • பழநி தல வரலாறு

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • Ashima Narwal’s inspiring and cherishing travel diaries 

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்  முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு 

எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்  முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு 

January 23, 2021
தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                           ஒருவனின் கதை “ முன்னா “       

தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                          ஒருவனின் கதை “ முன்னா “       

January 23, 2021
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !

நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !

January 23, 2021
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.

January 23, 2021
சென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு

சென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு

January 23, 2021
MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.

January 23, 2021
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Call us: +91 99946 67873

Copyright 2021 © Tamil2daynews. Maintained by Tamil2daynews.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
    • கிரிக்கெட்
    • பிற விளையாட்டுகள்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
  • கட்டுரைகள்

Copyright 2021 © Tamil2daynews. Maintained by Tamil2daynews.