ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தண்டட்டி – விமர்சனம்

by Tamil2daynews
June 21, 2023
in விமர்சனம்
0
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தண்டட்டி – விமர்சனம்

 

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை.

இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி.

57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி. வலி மிகுந்த கண்களின் வழியாக உணர்வுகளை எளிதாகக் கடத்துகிறார். காணாமல் போன தங்கப்பொண்ணுவை தேடிக் கண்டுபிடிக்க வந்துவிட்டு, தவிர்க்கவே முடியாத காரணங்களினால் தங்கப்பொண்ணுவின் உடல் தகனம் செய்யப்படும் நொடி வரை உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்திற்குப் பிறகு ஒரு வலுவான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து, மொத்தப் படத்தையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார்.
Thandatti gets a release date- Cinema express

கிடாரிப்பட்டி ஊர் மக்களிடம் மாட்டிக் கொண்டு அவர் முழி பிதுங்கும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார். தங்கப் பொண்ணுவின் குடிகார மகன் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா. பிரத்தியேகமான குடிகாரனின் உடல்மொழியினால் வசீகரிக்கிறார். திரும்பத் திரும்ப அவர் பேசும் சில வசனங்கள் அலுப்பூட்டினாலும் தன் அநாயாசமான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார். சிறுவன் முகேஷ் தங்கப் பொண்ணுவின் பேரனாக சில இடங்களில் கண்கலங்க வைக்கிறார். தீபா சங்கர், செம்மலர் அன்னம் போன்றோருக்கு பழக்கப்பட்ட பழைய கதாபாத்திரம் தான். இவர்களைத் தாண்டி நடிப்பில் கவனம் ஈர்த்தவர் அந்த “கோளாறு பாட்டி”. இவர் பசுபதியைக் கலாய்த்துக் கொண்டே அவரது ஹெட் கான்ஸ்டபிள் தொப்பியைத் தலையில் வைக்கும் அந்தக் காட்சிக்குக் கண்டிப்பாய் திரையரங்குகள் அதிரும்.

ஊர் சார்ந்த சம்பிரதாயங்கள், சடங்குகளைக் காட்சிப்படுத்திய விதத்திலும், நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒப்பாரிப் பாட்டிகளை வைத்துக் கொண்டே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படத்தைக் கொண்டு சென்ற விதத்திலும் இயக்குநரின் அபார திறமை விளங்குகிறது.

அது போல் நேட்டிவிட்டியுடன் கூடிய உடல்மொழியைத் துணை கதாபாத்திரத்திடம் கூட அச்சு அசலாக வாங்கியிருக்கும் அயராத அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட். படத்திற்கு மற்றொரு பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியுமே, கண்ணில் ஒற்றிக் கொள்ளத்தக்க தங்கத் தண்டட்டியைப் போல் மின்னுகின்றது.

இருப்பினும் படத்தில் பல காட்சிகள் விறு விறுப்பாக நகர்வது  காண முடிகிறது.

படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் இவரின் படத்தொகுப்பும் அருமை.

 கிடாரிப்பட்டி ஊர் மக்கள் என்று சொன்னால் ஒரு உள்ளூர் காவல் நிலையமே நடுநடுங்கும்  என்று சொல்லும் காட்சியே  படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
Thandatti to release in June- Cinema expressஅங்கு யாரையும் கை நீட்டி விடாதீர்கள் என்று ஹெட் கான்ஸ்டபிள் பசுபதிக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

அதைக் கேட்டு கான்ஸ்டபிள் பசுபதி கண்களில் ஒரு பயம் கலந்த மிரட்டல் தெரிவது என்னவோ நிஜம்.

அதுவரை தாயின் தண்டட்டிக்காக அடித்து உருண்டு குடுமிப்பிடி சண்டை போடும் குடும்ப உறவுகள், புதிதாக ஒரு பதினைந்து இலட்சம் வந்ததும் அந்தத் தண்டட்டியை அப்படியே விட்டுவிடுவார்கள் என்பது இன்றைய எதார்த்த வாழ்க்கையில் நடக்கும் காசோ, பணமோ, நகையோ எதுவோ ஒன்று தனக்கு வேணும் என்கிற சாதாரண மனிதனின் எண்ணத்தை பிரதிபலிக்கின்றது.

 எதார்த்த முகம் கொண்ட ஊர் மக்கள் கதாபாத்திரங்களும், சொத்துக்காகத் தெருக்குழாயடி சண்டை போடும் பிள்ளைகளின் கதாபாத்திரங்களும் நம்மைக் கதைக்குள் முழுமையாக இழுத்துச் செல்கின்றது.

 மொத்தத்தில் பத்து நிமிடம் வரும் காதல் காட்சிகள் படத்தில் முழுவதுமாக நம் மனதை விட்டு அகலாமல் இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு நாம் நகர வாழ்க்கைக்குள் கட்டாயமாக திணிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த ‘தண்டட்டி’  குழுவினர்களுக்கு நிச்சயமாக நம் வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும்.

வருடத்தில் 12 மாதங்களும் ஓய்வில்லாமல் உழைத்தாலும் கோடை விடுமுறைக்கு நகரத்தை விட்டு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று சுற்றுலா செல்ல நம் மனம் எவ்வளவு ஆசைப்படுமோ அந்த அளவுக்கு இந்த படம் பார்க்க மனம் நிச்சயம் ஆசைப்படும்

‘தண்டட்டி’ குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
Previous Post

அஸ்வின்ஸ் – விமர்சனம்

Next Post

ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது

Next Post

ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!