சினம் விமர்சனம்.
அருண் விஜய்க்கு இந்த ஆண்டு ஒரு அருமையான ஆண்டுனுதான் சொல்லணும். அந்த அளவுக்கு ஹார்ட்ரிக் அடிச்சிருக்காரு மனுஷன்.
இனி அருண் விஜய் அருமையான விஜய்யாக வலம் வருவார் தமிழ் சினிமாவில்.
அனாதையாக வளர்ந்த கதையின் நாயகன் பாரி ( அருண் விஜய் ) போலிஸ் அதிகாரியாக வேலை செய்கிறார் பிறகு எதார்த்தமாக ஒரு பெண்ணை ( பாலக் லால்வானி ) பார்க்கிறார் பிறகு காதல் மலர்கிறது அடுத்து திருமணம் நடக்கிறது அடுத்து ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் பாரி , ஒருநாள் அவரது மனைவி அவரின் அம்மாவின் வீட்டிற்கு சென்று திரும்பும்போது காணாமல் போகிறார் பிறகு தான் தெரிகிறது அவரின் மனைவி இறந்து விட்டார் என்பது அதுமட்டுமல்லாமல் அவரது அருகில் இன்னொருவரும் இறந்து கிடக்கிறார் மற்றும் பாரியின் மனைவி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் பாரிக்கு தெரியவருகிறது, இதனை செய்தது யார் என்பதை பாரி கண்டு பிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை … இதனை இயக்குனர் குமரவேலன் இவரின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான கதைக்களத்தை சில உணர்வுகளுடன் இயக்கியுள்ளார்.


இயக்குநருக்கு 2 கேள்விகள்.
1) கதாநாயகி ஆட்டோவில் ஏரி சென்றத ரெட்டில்ஸ் கேமரால பாக்குறாரு போலீஸா இருக்கக்கூடிய ஹீரோ ஏன் அவர் எங்கிருந்து ஏறினாரோ அந்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல சிசி டிவியில் ஏன் வாட்ச் பண்ணல இது முதல் கேள்வி.
2) மீடியா மூலம் கதாநாயகி ஒரு தப்பானவள் என்ற மாயை உங்கள் திரைக்கதையின் மூலம் உருவாக்கிய நீங்கள் அதே தன் கணவர் மூலம் தன் மனைவி அந்த மாதிரி அல்ல என்பதை இறுதியில் ஒரு காட்சியாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அந்த காட்சி ஏன் வைக்கவில்லை.
இது படம் பார்ப்போரின் மிகப்பெரிய மனவலியாகவும் ஒரு குறையாகவும் இருக்கும் என்பது துளி அளவும் சந்தேகம் இல்லை.
4 – 5 காட்சிகளிலேயே வந்தாலும் சித்து சங்கர்- நேர்மையற்ற போலீஸ் இன்ஸ்’ ஆக ‘சினம்’ படத்தில் இடைவெளி வரை ஆளுமை செய்கிறார். அவரை நேர்மையான போலீஸ் சப்- இன்ஸாக எதிர்கொள்ளும் அருண் விஜய் ஆகட்டும் ஏட்டய்யா காளி வெங்கட் ஆகட்டும்., இவர்களுக்கெல்லாம் உயர்அதிகாரி RNR மனோகர் ஆகட்டும் நல்ல போலீஸ் , கெட்ட போலீஸ் ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார்கள்., ‘சினம்’ படம் முழுக்க என்றால் மிகையல்ல.
நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு உயிர் கொடுத்திருப்பது இந்த படத்தின் தனி சிறப்பு.
அருண் விஜய் கவனத்திற்கு
அருண் விஜய் நீங்கள் அப்போதே ஆக்சன் விஜய் தான், இனிமேல் நீங்கள் அருமையான விஜய்யாக தமிழ் சினிமாவில் வலம் வரலாம். அந்த அளவிற்கு ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார்
ரேட்டிங் – 4/5
சேலம் சரண்
(9994667873)