வெந்து தணிந்தது காடு விமர்சனம்
முதல்ல இந்த படத்தை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கும், இந்த படத்தில் நடித்த சிலம்பரசனுக்கும் ஒரு பெரிய வாழ்த்து சொல்லியே ஆகணும்.
ஏன்னா ரெண்டு பேரோட வழக்கமான விசயங்கள் எதுவுமே படத்தில் இல்லை அதுக்கு தான் இந்த வாழ்த்துக்கள்.

கதையின் நாயகன் முத்து ( சிலம்பரசன் ) ஒரு கிராமத்தில் இருக்கிறார் அங்கு அவர் ஒரு சில பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவரின் அம்மா (ராதிகா ) ஒருவரின் உதவியுடன் முத்துவை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார் அப்படி முத்து மும்பைக்கு வந்து சேரும் இடம் தான் இசக்கி பரோட்டா கடை, இசக்கி பரோட்டா கடையில் வேறு ஒருசில விஷயங்களும் நடக்கின்றன அதனை பார்த்து முத்து வியக்கிறான், அந்த கடையில் அப்புக்குட்டி அவருக்கு நண்பராக இருக்கிறார், ஒரு கட்டாயத்தினால் முத்து கேங்ஸ்டர் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார், அதன் பிறகு அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பதும் இதற்கிடையில் இவருக்கு ஒரு காதல் மலர்கிறது , கடைசியில் காதலியை கரம்பிடித்து எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவரின் தனித்துவமான இயக்கத்திலிருந்து சற்று வித்யாசமான இயக்கத்தை கொடுத்துள்ளார்.

படத்துல சிறப்பு அம்சங்கள் என்னென்ன
இயக்குனரோட அருமையான இயக்கம்,
அடுத்தது பிரச்சனைக்குரிய ஹீரோ நம்ம சிம்புவோட சிறப்பான நடிப்பு,
அடுத்தது ஆஸ்கார் நாயகனின் பின்னணி இசை ,
அடுத்தது ஸ்டண்ட் மாஸ்டர் .
சண்டை காட்சிகள் முகம் சுளிக்காத வகையில் இருப்பது பெரிய விஷயம்,
இதற்கு அடுத்தது ஒலிப்பதிவு மொத்தத்துல படம் கண்ணுல வச்சு ஒத்திக்கலாம்.
ரேட்டிங் – 3.75 /5
சேலம் சரண்
(9994667873)