• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல் களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

by Tamil2daynews
March 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கௌதம் ராம் கார்த்திக்கின் அதிரடி அரசியல்  களத்தில் வெளியான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டைட்டில் டீசர்!

“மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம்,  ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது.

டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகளை எல்லாம் சமூக இயக்குநர் ராஜு முருகன் எழுதிய கூர்மையான வசனங்கள் உயிர்ப்பிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, பின்னணி குரல் ஒலிப்பதிவுடன் இணைந்து பல அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் தொடர்ச்சியாக மான்டாஜ் வடிவில் வெளிப்படுகின்றன. இறுதியில், கதாநாயகன் கெளதம் ராம் கார்த்திக் அவர்களின் வலுவான தோற்றத்துடன், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படத்தின் தலைப்பான “Bloody Politics” வெளிப்படுகிறது. தீவிரமான கதை சொல்லலும் வலுவான காட்சிப்படுத்தலும் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த டீசர் சிறப்பாகத் திகழ்கிறது. ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா காட்சிகளுக்கு கடினமான மற்றும் நிஜத்தன்மை மிக்க தோற்றத்தை அளிக்க, இசையமைப்பாளர் சாம் C. S. ன் மிரட்டலான பின்னணி இசை டீசரின் தீவிரத்தையும் நாடகத் தன்மையையும் மேலும் உயர்த்துகிறது.
இந்தத் திரைப்படத்தில் கெளதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கதாநாயகியாக அஞ்சனா நேத்ருன் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ரோபி, P. வாசு, A. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கணேஷ் K. பாபு (DaDa படத்தின் இயக்குநர்) தனது தயாரிப்பு நிறுவனமான Draft by GKB மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக சஞ்சய் முத்துக்குமார் V உள்ளார். டைட்டில் டீசரை பார்க்கும் பொழுது, அது இயக்குநர் தீனா ராகவன் அவர்களின் தன்னம்பிக்கையூட்டும் இயக்கத் திறமையை வெளிப்படுத்துகிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநராக தா. ராமலிங்கம் , எடிட்டராக தீபக் S பணியாற்றுகின்றனர். பாடல் வரிகளை யுகபாரதி, கணேஷ் K. பாபு மற்றும் சௌமியா பாரதி D எழுதியுள்ளனர். கூடுதலாக காஸ்ட்யூம் டிசைனராக காயத்ரி பாலசுப்ரமணியன் , ஸ்டண்ட் இயக்குநராக அபிஷேக் ஸ்ரீனிவாஸ், நிர்வாக தயாரிப்பாளராக துரை கார்த்திக் பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பு பொறுப்பை ரேகா மேற்கொள்கிறார்.

வலுவான அரசியல் பின்னணி, தாக்கம் மிக்க காட்சிகள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவுடன், Bloody Politics படம் ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சக்திவாய்ந்த டைட்டில் டீசர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Previous Post

காதல் ரீசெட் ரிப்பீட் – விமர்சனம்

Next Post

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

Next Post

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.