• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தொலைக்காட்சித் தொடர்களின் நாயகன் சித்து அறிமுகமாகும் திரைப்படம் ‘அகோரி ‘

by Tamil2daynews
December 10, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தொலைக்காட்சித் தொடர்களின் நாயகன் சித்து  அறிமுகமாகும் திரைப்படம் ‘அகோரி ‘

 

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து.இவர்    நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார்.

‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது.இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன்   தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை.

இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து  அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும்
படமாக்கப்பட்டன.

படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம்  புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.இவர்  ‘144’ பட நாயகியும் கூட.

இவர்களுடன் மைம் கோபி,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில்  நடித்திருக்கிறார்கள்.

அகோரி படத்துக்கு  ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின்  கூட்டணி இது. கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் CG டீமின் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன்.

‘ அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

இப்படத்தைத் திரையரங்குகளில் PVR சினிமாஸ் வெளியிடுகிறது.பிரம்மாண்டமான பல வெற்றிப் படங்களை வெளியிட்ட பி விஆர் சினிமாஸ் இப்படத்தை வெளியிடுவதில் இருந்து படத்தின் நம்பகத்தன்மையும் வணிக மதிப்பும் அதிகரித்துள்ளன.

Previous Post

ஹாலிவுட் விருதுகளில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

Next Post

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர், மகத் ராகவேந்திரா, வசுந்தரா மற்றும் கோமல் சர்மா

Next Post

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர், மகத் ராகவேந்திரா, வசுந்தரா மற்றும் கோமல் சர்மா

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.