ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேசிய தலைவர் திரைப்படத்தின் கதை நாயகன் ஜெ.எம். பஷீர் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் மருது ஸ்கொயர்..

by Tamil2daynews
February 17, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேசிய தலைவர் திரைப்படத்தின் கதை நாயகன் ஜெ.எம். பஷீர் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் மருது ஸ்கொயர்…

 

கடந்த 2019ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் ஆயிஷா. அழகும், ஆற்றலும் ஒருங்கே அமைந்த  ஆயிஷா வழக்கறிஞர் படிப்பு படித்து வருகிறார்.  கலைத்துறையில் மிகுந்த ஆர்வம்  கொண்ட ஆயிஷா அதற்கான தகுதியையும் வளர்த்துக்கொண்டார்.
ஶ்ரீதர் மாஸ்டரிடம் நடனம் கற்றுதேர்ந்தவர்,  ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், மிராக்கல் மைக்கேல் ஆகியோரிடம் சண்டைப் பயிற்சி பெற்றார். மதுரை முத்துகாமாட்சியிடம் வாள் சண்டை, சிலம்பாட்டம் போன்ற கலைகள்  6 மாத காலம் பயிற்சி பெற்று தேர்ந்தார்.
இளமை துடிப்பும், துணிச்சலும் கொண்ட ஆயிஷா விரைவில் தமிழ் திரைப்படத்தில் வீரமங்கையாக அறிமுகமாக உள்ளார்.
"தி.மு.க.வுக்காவது போய்த் தொலைய்யா!"- `தேசியத் தலைவர்' ஹீரோ திசை மாறிய பின்னணி இதுதான்! | The reason behind Actor J M Basheer joining DMK
பசும்பொன் முத்துராம லிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது தேசியத் தலைவர். இதில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவராக அச்சு அசல்  அவரைப் போலவே சாயல் கொண்ட ஜெ.எம். பஷீர் நடித்துள்ளார் . இப்படத்தையடுத்து ஜெ . எம். பஷீர்,  மருது சகோதரர்கள் வாழ்க்கை படமாக உருவாக விருக்கும் “மருது ஸ்கொயர்” என்ற படத்தில் பெரிய மருதுவாக நடிக்கிறார்.
பெரிய மருது,  சின்ன மருதுவின் தலைவியாக திகழ்ந்தவரும் முதல் இந்திய பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை யாகவும் திகழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியார்  வேடத்தில்தான் ஆயிஷா நடிக்கிறார். இந்த சரித்திர கதாபாத்திரத்திற்கு ஆயிஷா கடுமையான வாள் சண்டை பயிற்சி, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் முறைப்படி கற்றிருக்கிறார்.
வேலு நாச்சியாராக நடிக்க உள்ள ஆயிஷா தற்போது தேசிய  தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ள ஜெ.எம் பஷீரின் மகள் என்பது குறிப்பிடத் தக்கது.
மருது ஸ்கொயர் படத்தை டிரெண்ட்ஸ் சினிமா  பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்ட பொருட் செலவில் ஜெ.எம்.பஷீர் அவர்கள் தயாரிக்கிறார் .
Image
ஊமை விழிகள்,  உழவன் மகன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய ஆர்.அரவிந்த்ராஜ் தற்போது தேசிய தலைவர் திரைப்படத்தை முடித்துவிட்டு.. மருது ஸ்கொயர் படத்தை  இயக்க உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் இசை அமைக்க உள்ளார்.
மேலும் இப்படத்தில் சின்ன மருதுவாக நடிக்க பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  இது தவிர பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர்.
இப்படத்தில் நடிக்கவிருக்கும்  நடிகர்,நடிகைகள் விபரம் விரைவில் படக்குழுவால் வெளியிடப்படும்…
வரும் ஏப்ரல் மாதம்  “தேசிய தலைவர்” படம் வெளியான பின்னர் சிவகங்கை சீமையில் இன்றைக்கு இருக்கும் ராணியின் அரண்மனை யில் “மருது ஸ்கொயர்”  படத்தை ராணி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
Previous Post

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’ (Voice of Thiru)!

Next Post

இன்று முதல் கேரளாவிற்கு வெளியிலும் வெளியாகிறது ‘இரட்டா’!

Next Post

இன்று முதல் கேரளாவிற்கு வெளியிலும் வெளியாகிறது 'இரட்டா'!

Popular News

  • செங்களம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘தேன்’ திரைப்பட புகழ் நடிகர்  தருண் குமார் பெருமிதம்…

    0 shares
    Share 0 Tweet 0
  • 83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

    0 shares
    Share 0 Tweet 0
  • பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செங்களம் – விமர்சனம்

March 25, 2023

N4 – விமர்சனம்

March 25, 2023

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

March 25, 2023

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

March 25, 2023

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

March 25, 2023

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

March 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!