• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

by Tamil2daynews
March 21, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

 

காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “திரைக்கதைதான் ஹீரோ” எனும் நோக்கில்  தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை வடிவத்தை  மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்ததிலிருந்து மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கண்ணாடி சிதறல்களாக உடைந்த தெறிக்க, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

நடிகர்கள் கிஷோர் மற்றும் ‘HeartBeat’ சீரிஸ் புகழ் சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான் மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்  விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா கவனித்துள்ளார். படத்தொகுப்பை புவன் சீனிவாசன் மேற்கொண்டு வருகிறார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் இப்படம் தரமான படைப்பாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை ” ரூம் பாய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!!

Next Post

மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் – யோகி பாபு

Next Post

மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் - யோகி பாபு

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.