• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட்

by Tamil2daynews
June 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நான்கு சீசன்களில் உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ மலேசியா லைவ் கான்சர்ட்  

 

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது. ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ என்கிற பெயரில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு அரங்கில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பு பிப்ரவரியில் இதன் அடுத்த சீசனை 2.0 என்கிற பெயரில் நடத்துவதற்கு உத்வேகம் அளித்தது
மிக திறமையான மற்றும் நன்கு பிரபலமான இசைக்கலைஞர்கள் பங்குபெற்ற, டத்தோ அப்துல் மாலிக் அவர்களால் வழங்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி ஒருவிதமான புதிய அனுபவத்தை கொடுத்தது. பாப், ராக், நாட்டுப்புற மற்றும் ஹிப்ஹாப் என வித்தியாசமான ஜானர்களில் அடுத்தடுத்து விதம்விதமான இசைக்கலைஞர்களின் பங்களிப்பில் உற்சாகமும் இளமை துள்ளலுமாக வரிசை கட்டிய இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடல்களுக்கு அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் கோரஸாக பாடியதுடன் அவர்களுடன் இணைந்து நடனமும் ஆடினர்.

ஒலி அதிர்வுகளாலும் மற்றும் ஒளி அலங்கராங்களாலும் ஆக்சியாட்டா அரீனா அரங்கமே ஒரு மறக்க முடியாத இசை அனுபவத்திற்கு மாறியது. வருகை தந்த ஒவ்வொரு பார்வையாளருமே மேடையில் நிகழ்வதை நேர்த்தியாக கண்டுகளிக்கும் விதமாக இருக்கை ஏற்பாடுகள் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டிருந்தன..

‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ் 2.0’வை தொடர்ந்து 3.0 & 4.0 ஆகியவை சமீபத்தில் கடந்த வாரத்தில் மலேசியாவில் நடைபெற்றன.
தங்களது அசத்தலான பாடல்கள் மூலம் பார்வையாளர்களை தங்களது காலடியில் கட்டிப்போட்ட பாடகர்கள் திப்பு, ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் ஆலாப் ராஜூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது..

அடுத்ததாக கார்த்திக், கிரிஷ் மற்றும் விஷ்ணுப்ரியா ஆகியோர் முடிலும் வேறுவிதமான உணர்வை மேடையில் கொண்டுவந்தனர். அவர்களது ஆத்மார்த்த இசையும் வசியம் செய்யும் குரலும் அந்த பாடல்களுக்கு பார்வையாளர்களையும் ஆடவைத்தன.

விதவிதமான ஜானர்களுடன் கூடிய இசையாலும் நிகழ்ச்சிகளின் வரிசையாலும் இரவு கடந்தும் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை தொடர்ந்து வசீகரித்தது. பலவேறு பிரிவுகளை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது வித்தியாசமான ஸ்டைல்களால் அவற்றை ஒருங்கிணைத்த நேர்த்தியாலும் கூடிய ஒரு ஏற்பாடாக மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது..

இயக்குனர் கவுதம் மேனன், விஜே ரம்யா சுப்ரமணியம், நடிகை அனு இம்மானுவேல் மற்றும் மிருணாளினி ரவி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன் தங்களது பேச்சாலும் செயலாலும் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
ஹரிசரண், ஸ்ரீதர் சேனா, ஷர்மிளா மற்றும் சைந்தவி ஆகியோரின் மிரளவைக்கும் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. கூடியிருந்த கூட்டத்தை பிரமிக்க வைத்த அவர்களை பாராட்டும் விதமாக அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்

மொத்தமாக பார்க்கையில் இந்த இசை நிகழ்ச்சி ஒரு மாபெரும் வெற்றி.  பார்வையாளர்களை போரடிக்க விடாமல் பொழுதுபோக்க செய்யும் வகையிலான சிறந்த பணியை மேற்கொண்ட இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஒவ்வொருவரும் அடுத்த நிகழ்ச்சி எப்போது நடக்க உள்ளது என கேள்வி எழுப்பும் அளவுக்கு அனைவருக்கும் முழு திருப்தி அளித்ததுடன் குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்தது.

முழுதும் விற்றுத்தீர்ந்த நான்கு சீசன்களால் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ 5.0வை பினாங்கிலும் 6.௦0வை  சிங்கப்பூரிலும் 7.0வை மலேசியாவிலும் அடுத்தடுத்து நடத்த உள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

Previous Post

பரபரப்பான Mr.X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சுவாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Next Post

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா

Next Post

உலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.