பொதுவாக அன்றையிலிருந்து இன்று வரை ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவு லட்சியத்தோடு பலபேர் இருக்கையில் விளையாட்டாக ஒரு படத்தை “சென்னை-28” என்று ஆரம்பித்து அதிலும் விளையாட்டாக வெற்றி கண்டவர் தான் வெங்கட் பிரபு.

சென்னை-28 படத்திற்கு பிறகு ஒரு சில காமெடி படங்களையும் தல அஜித் அவர்களை வைத்து இயக்கிய “மங்காத்தா” பட கதைக்களம் கூட ஒரு ஜாலியான எந்த ஒரு உழைப்பும் இல்லாம அடுத்தவனை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எப்படி என்ற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட கதைதான் மங்காத்தா.
இவரது படங்களில் கதையும் நடிப்பும் இருக்கிறதோ இல்லையோ அவரது உடன் பிறந்த தம்பியும்,பிறக்காத சரக்கும்(drinks) இருப்பது நிச்சயம்.
பொதுவா சினிமா ரசிகர்கள் கிட்ட வெங்கட் பிரபு படம் என்றால் ஒரு ஜாலியா ஒரு இரண்டு மணி நேரம் பொழுது போறது தெரியாம இருக்கும்.
நம்ம தெரு ஏரியாக்களில் நடக்கிற சின்ன சின்ன சில்மிஷங்கள் காமெடிகள் இந்த மாதிரியான விஷயங்கள் படத்தில் நிறைய இருக்கும் அப்படின்னு நம்பி இவர் படத்துக்கு சமீப காலமாக போன ரசிகர்கள் நிறைய ஏமாற்றத்தோடு தான் வந்திருக்காங்க.
அதற்கு சமீபத்திய உதாரணம் மே 12-ல் வெளியான படம் தான் “கஸ்டடி”.

அதெல்லாம் சரி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்க்கும் இதற்க்கும் என்ன சம்பந்தம்.
(அன்றைய பத்திரிகை செய்தி)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல் முதலாக தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு ஒரு சில வருடங்களிலேயே ஆடம்பரமான தன் வளர்ப்பு மகனுக்கு நூறு கோடியில் திருமணமும்,பார்ப்பவர்கள் இடமெல்லாம் அவர்களின் சொத்துக்களை ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்கள் விருப்பமில்லாமல் தங்களை மிரட்டி வாங்கிக் கொண்டதாக நிலங்களையும் வீடுகளையும் பறி கொடுத்த பல பேர் பேட்டி அளித்தது அப்போதைய பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஒரு சிலர் ஆளுங்கட்சியில் நமக்கு எதுக்கு வம்பு என்று வாய் திறக்காத நிலையும் ஏற்பட்டது.

இதுவும் அப்போதைய நாளிதழ்களில் பரபரப்பாக பேசப்பட்டது .
அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சி காலம் முடிந்து மாற்று கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அவரது ஊழல்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் தண்டனையும் கிடைத்தது இது அனைவரும் அறிந்ததே.
இதெல்லாம் சரி இப்ப அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

இப்போ உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும் இந்த படத்தின் கதையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிர்க்கட்சியால் நேர்ந்த கதி என்ன வென்று.
இந்த சம்பவம் நடந்து பல வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைப்படமாக எடுக்க என்ன அவசியம் வெங்கட் பிரபு அவர்களே.

“அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்”
ஏன் தண்டனை காலம் போதே ஒருவர் மறைந்தும் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த விஷயம் நடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது அதன் பிறகு அதே மாற்றுக் கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்தாங்க திரும்பவும் ஜெயலலிதா வந்தாங்க அப்பொழுதெல்லாம் இந்த சம்பவம் பற்றி படம் இயக்காம அவர் இறந்த பிறகு எடுக்க காரணம் என்ன..!
இதே வெங்கட் பிரபு ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா முன்பு மேடையில் அவரையும் அவரது அரசயும் பாராட்டக்கூடிய விதத்தில் ஒரு நாடகத்தை மிர்சி சிவா அவரது தம்பி பிரேம்ஜி அமரன் மற்றும் அவரது குழுக்களை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி ஜெயலலிதாவின் கைத்தட்டலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் தைரியம் நன்றாகவே புரிகிறது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களே.
(முக்கிய குறிப்பு)