• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

லவ் பண்ணா உட்றனும்” Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்”

by Tamil2daynews
December 17, 2020
in சினிமா செய்திகள்
0
லவ் பண்ணா உட்றனும்” Netflix  நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்”
0
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் விகனேஷ்  சிவனின் பகுதி !


Netflix நிறுவனத்தின்  சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி   திரைப்படமான  “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் முக்கிய  இயக்குனர்களான  சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன்,  கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.   காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை  நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள “லவ் பண்ணா உட்றனும்” பகுதி பலமிக்க பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெண், தனது சாதியை கடந்து ஒருவரை காதலிக்கும் போது, என்ன நடக்கும் என்பதை சொல்கிறது. இப்பகுதியில் பதம்குமார் அரசியல்வாதி வீரசிம்மன் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இரட்டை பிறவி மகள்களான ஆதிலக்‌ஷ்மி மற்றும் ஜோதிலக்‌ஷ்மியாக நடிகை அஞ்சலியும், கல்கி கொச்சலினும் நடித்துள்ளார்கள். இவர்களில் ஒரு மகள் தனது தந்தையும் சமூகமும் ஒப்புக்கொள்ளாத ஒருவனோடு காதல் கொள்கிறாள். மேலும் தனது தந்தையின் சம்மதம் பெறவும் முயல்கிறாள். அவளது காதல் அனைத்தையும் கடந்து வெல்லுமா,  அல்லது மனித உணர்வுகளை விட ஒருவரின் கௌரவமும், சாதியும் தான் முக்கியமா என்பதே கதை.

“லவ் பண்ணா உட்றனும்” படத்தினை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது…

ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் எளிய உறவு எந்த அளவு சிக்கலுக்குள்ளாகும் என்பதை சொல்ல விரும்பினேன். “லவ் பண்ணா உட்றனும்” படத்தின் கதை ஒரு அரசியல்வாதியின் மகள் தனது தகுதிக்கும், சாதிக்கும் எதிரான ஒருவனை காதலிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்வதாகும். வாழ்வை பிரதிபலிக்கும் இந்த கதையை மிகப்பிடித்தமான படக்குழுவுடன் உருவாக்கியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. எனது நீண்ட நாள் கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது.

இப்படத்தினை  ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம்  தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக வெளியிடுகிறது.

“பாவக்கதைகள்” திரைப்படம்  டிசம்பர் 18, 2020 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 193 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.

RSVP Movies

RSVP நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்  என்பது நாம் இங்கு சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதைகளை உருவாக்குவதும், நாம் சொல்ல ஆசைப்படும் கதைகளை, மக்கள் தியேட்டர் சென்று பார்க்க ஆசைப்படும் கதைகளை உருவாக்குவதும் ஆகும். இன்றைய இளைஞர்கள் இணையவெளியில் தாங்கள்  பார்க்கும் கதைகளில் நிறைய தேர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த  வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளை தொடர்ந்து புதிதாக,  வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கிகொண்டே இருக்கவேண்டும் என்பதாகும்.
இந்நோக்கத்தில் செயல்படும் RSVP Movies நிறுவனம் Love  Per Square Foot, Lust Stories, Karwaan, Pihu, Kedarnath, URI – The Surgical Strike, Sonchiriya , Raat akeli hain , the sky is pink and Mard Ko Dard Nahi Hota போன்ற முக்கிய படைப்புகளை உருவாக்கியுள்ளனர். மேலும் அவர்களது தயாரிப்பில்  Rashmi Rocket , Tejas , Pippa and Sam Maneckshaw போன்ற படைப்புகள் வெளிவர தயாராகவுள்ளது.

Flying Unicorn Entertainment  நிறுவனம்

ஆஷி துவா சாரா தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய சுதந்திரமாக இயங்கும் நிறுவனம் தான் Flying Unicorn Entertainment ஆகும். ஆஷி துவா சாரா தான் இந்தியாவில் முதன் முதலில் ஆந்தாலஜி படைப்பை, பாலிவுட்டின் முக்கிய ஆளுமைகளான ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப், மற்றும் கரண் ஜோகர் ஆகியோர் இயக்கத்தில்  பாம்பே டாக்கீஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவற்றை உருவாக்கினார்.  மேலும் இவர் சஃய்ப் அலிகான் நடிப்பில் உருவான கேபர் ப்ளாக் காமெடி (caber black comedy) படமான காலக்காண்டி படத்தை தயாரித்துள்ளார்.

Previous Post

தமிழ்சினிமா-80 தொகுப்பு..!

Next Post

“கிளாப்”  விரைவில் திரையில் ! 

Next Post
“கிளாப்”  விரைவில் திரையில் ! 

“கிளாப்”  விரைவில் திரையில் ! 

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.