• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாநில அரசின் அரசாணையை ரத்து செய்ய சீமான் வலியுறுத்தல்…

by Tamil2daynews
October 15, 2021
in சினிமா செய்திகள்
0
மாநில அரசின் அரசாணையை ரத்து செய்ய சீமான் வலியுறுத்தல்…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமானது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகளின் தொடர் இயக்க அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தைப் பல ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலை முற்றாகச் சீர்கெடுக்க வழிவகுக்கும் இவ்வரசாணையைச் சூழலியல் கண்ணோட்டமின்றித் தான்தோன்றித்தனமாக வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை, சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்தும் பாதிப்பின் அளவினை வைத்து வகைப்படுத்தி, தொடங்குவது முதல் இயங்குவது வரை அனுமதிப்பதற்கு, தனித்தனி விதிமுறைகள் வகுக்கப்பட்டு இதுவரை செயலாக்கம் செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, அவை தொடர்ந்து இயங்குவதற்கு வழங்கப்படும் அனுமதியானது (Consent to Operate – CTO) முறையே, சிவப்புத் தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளுக்கும், ஆரஞ்சு தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், பச்சைத்தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளுக்கும் செல்லுபடியாகுமென்றும், அதன்பிறகு அந்த அனுமதியானது தொழிற்சாலைகளின் செயல்பாட்டினைப்பொறுத்து இரண்டாண்டுகளுக்குள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட (Renewal of Consent – RCO) வேண்டுமெனவும் விதிமுறை நடைமுறையிலிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை இனி, தொழிற்சாலைகள் முறையே சிவப்பு – 5, ஆரஞ்சு – 10, பச்சை – 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது எனக்கூறியிருப்பது, எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்குப் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் பேராபத்தாகும். ஏற்கனவே, தமிழ்நாட்டிலுள்ள அணு, அனல் மின்நிலையங்கள், சுத்திகரிப்பு ஆலைகள், வாகனத்தொழிற்சாலைகள், மருத்துவத்தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், சாயத்தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வேதித்தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தையும், நீரையும், காற்றினையும் மாசுபடுத்துவதோடு மக்களின் உடல் நலத்தையும், கெடுத்து புதிய புதிய நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

ஒவ்வொரு முறையும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தி, அதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய மிக இழிவான அவலநிலையே தமிழ்நாட்டில் உள்ளது. இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கி, அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? எனக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்க வேண்டிய தமிழக அரசு, சுற்றுச்சூழல் விதிமுறைகளை மேலும் தளர்த்தியிருப்பது எவ்வகையிலும் சரியான நடவடிக்கை அல்ல. ஒவ்வொரு ஆண்டும் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கும்போது சுற்றுச்சூழல் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்தப்பிறகு, செயல்பட அனுமதிப்பதே, சரியான நடைமுறையாக இருக்க முடியும். அதனைவிடுத்து, பத்தாண்டு, பதினைந்தாண்டுகளெனக் கட்டற்று, சுற்றுச்சூழல் விதிமுறைகளில் சலுகையளிப்பதென்பது மீளமுடியாத பேரழிவினை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டினை உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக மாற்றிவிடும் அபாயமுமுண்டு. இது நம் வருங்காலத் தமிழிளம் தலைமுறையினருக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

நாம் தமிழர் கட்சியைப் பார்த்து, ‘சுற்றுச்சூழல் அணி’ என ஒன்றைத் தொடங்கிய திமுக, ஆட்சியில் அமர்ந்த பிறகு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இலட்சணம் இதுதானா? ஒரு சில தனியார் பெருமுதலாளிகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கக் கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வோடு சமரசம் செய்துகொள்வது மோசடித்தனமில்லையா? ஏற்கனவே, முறைகேடாகக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளாலும், அதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாத அதிகாரிகளாலும் ஊழல் மலிந்துக்கிடக்கும் சுற்றுச்சூழல் துறையில் அரசின் இத்தளர்வுகள் மேலும் பன்மடங்கு முறைகேடுகள் அதிகரிக்க வழிவகுப்பதோடு, தொழிற்சாலைப்பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி ஊழியர்களின் உயிருக்குப் பெருந்தீங்கினையும் ஏற்படுத்தும்.

ஆகவே, மண்ணுக்கும், மக்களுக்கும் பேரழிவினை ஏற்படுத்தக்கூடியவகையில் தொழிற்சாலைகளுக்கான அனுமதியில் கட்டற்ற கால அவகாசமளிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Previous Post

“MCKINGSTOWN” Men’s Grooming launched by Madhu Saran & Chinnamma Jacob at Shenoy Nagar

Next Post

இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

Next Post
இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Actress Shirin Kanchwala Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • ”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.