வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாறில் சரித்திரம் படைத்த கரகாட்டக்காரன் படம் மட்டுமல்ல பல நூறு நாட்கள் படங்களை தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மக்கள் நாயகன் ராமராஜனை பற்றிதற்சமயம் தவறான வதந்தியை பரப்பிவருகிறார்கள். திரு.ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம்.




இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.
ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கொள்வார்.
விஜயமுரளி
PRO of actor Ramarajan