• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு..!

by Tamil2daynews
December 18, 2020
in சினிமா செய்திகள்
0
பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு..!
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வானம் கலைவிழாவை தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு :
மார்கழியில் மக்களிசை,
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார்.
திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் இசை வரலாற்றில் முதல் முறையாக பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடக இசை என அனைத்து வகையான இசைகளையும், இசைக் கலைஞர்களையும் இணைத்து ‘Casteless Collective’ எனும் இசைக்குழுவையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இசையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும், பன்னாட்டு வடிவ மேடையில் உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல்கள், சமூகப்பிரச்சனை பற்றிய பாடல்களை அரங்கேற்றியுள்ளது. அதற்கான அங்கீகாரமாக, பொதுமக்களின் பாராட்டுக்களையும் மற்றும் பல்வேறு விருதுகளையும் ‘Casteless Collective’ குவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் நிகழ்ச்சிக்கான முன்பதிவு குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
முதல் மூன்று நாட்கள் (24,25,26-12-2020) சென்னை வாணி மஹாலில் நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், கானா பாடல் நிகழ்ச்சிகளும்.
நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் (27,28-12-2020) சென்னை மையிலாப்பூரில் உள்ள மைலாப்பூர் பைஃன் ஆர்ட்ஸ் கிளப்பில் ஹிப் ஹாப் மற்றும் ஒப்பாரி நிகழ்ச்சிகளும்.
 ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (29,30-12-2020) சென்னை ராஜா அண்ணாமலை ஹாலில் அறிவொளி மற்றும் தெம்மாங்கு நிகழ்ச்சிகளும்.
 இறுதி நாளான எட்டாம் நாளில் (31-12-2020) ’CASTELESS COLLECTIVE’ குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
 ’CASTELESS COLLECTIVE’ குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம்
குறித்தான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
#நீலம்பண்பாட்டுமையம்
Previous Post

அமேசான் ஒரிஜினல் தொடர் Bandish Bandits இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து மகிழுங்கள்

Next Post

Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்”

Next Post
Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்”

Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்”

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.