• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

by Tamil2daynews
September 19, 2021
in சினிமா செய்திகள்
0
“பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்பட  பத்திரிக்கையாளர் சந்திப்பு !
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Positive Print Studios சார்பில்  L சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில்  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி  திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.  2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
இந்நிகழ்வில்…
நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது… பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும், இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தந்து வெற்றிப்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது,  எனது கனவுகளில்  ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி,  இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க  வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி,  இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைபடங்கள் பார்த்து மகிழலாம்.
நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது…
மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்பொது தான் சினிமா வளரும்.  இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ஆதரவை தர வேண்டும் நன்றி.
நடிகை பூர்ணிமா ரவி கூறியதாவது…
இது எனது முதல் திரைப்படம். படப்பிடிப்பு அனுபவங்கள் முழுதுமே எனக்கு புதிதாக இருந்தது. என்னை மிகவும் ஆதராவாக கவனித்துகொண்ட படக்குழு அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் எனது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது.., இது மற்ற படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான தங்கை பாத்திரமாக இருக்கும் என உறுதியளித்தார். என்னை கனிவாக கவனித்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி
நடிகர் பாலசரவணன் கூறியதாவது…
நானும் ரியோ ராஜும் சகோதரர்கள் போல் தான். எங்கள் நட்பு, விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொட்டே, தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பத்ரியிடம் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிந்துரைத்தற்கு ரியோ ராஜுக்கு நன்றி. குடும்பங்கள் இணைந்து, கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…
திரையுலகை சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப்பெரிய துன்பங்களை கடந்து வந்தார்கள். அவையனைத்தையும் கடந்து இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி.  தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக செய்துள்ளார் இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும், 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
ஒளிப்பதிவாளர் B.ராஜசேகர் கூறியதாவது…
அனைவருமே இப்படத்தை படப்பிடிப்பு தளத்திலேயே கோண்டாடினோம். இயக்குநர் பத்ரியுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய ஓடிடி தளங்கள் அணுகிய போதும் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் உறுதியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
படத்தொகுப்பாளர் சாம் RDX கூறியதாவது…
இத்தருணத்திற்காக தான்  நாங்கள் அனைவருமே காத்திருந்தோம். இப்படத்தை எடிட் செய்வது மிக கடினமாக இருந்தது. எங்கு கட் செய்வது, எதை விடுவது, என்பதே புரியவில்லை. “காதலா காதலா, பஞ்ச தந்திரம்” படத்தை எப்போது டிவியில் பார்த்தாலும் கொண்டாடுவது போல், இப்படமும் கொண்டாடப்படும். “பிளான் பண்ணி பண்ணனும்” மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக, திரையரங்கில்  அனைவரும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திரைப்படமாக இருக்கும்.
நடிகர் சித்தார்த் விபின் கூறியதாவது…
பொது முடக்க காலத்தில் இந்த திரைபடம் ஓடிடியில் வர பேச்சுவார்த்தை நடப்பது போல் இருந்தபோது, மிகவும் பயந்தேன் ஆனால் தயாரிப்பாளர்கள் மிக உறுதியுடன் இருந்து திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதை, கேட்டபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. திரையரங்குகளில் அனைவரும் இப்படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
கலை இயக்குநர் PPS சரவணன் கூறியதாவது…
இப்படம் முழுக்க முழுக்க சிரித்து மகிழும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். கொரோனா சோகங்களை மறந்து அனைவரும் வெடித்து சிரிக்கும்படியான படமாக இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்த்து சிரித்து கொண்டாட  வேண்டும், என
கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
பாடலாசிரியர் நிரஞ்சனா பாரதி கூறியதாவது…
எல்லோரும் கூறியது போல் இப்படம் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக, திரையரங்கில் ரசிக்ரகள் கொண்டாடி மகிழும் படைப்பாக இருக்கும். நான் இப்படத்தில் நான்கு பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமானதாக இருக்கும் ஒவ்வொரு பாடலிலும் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது…
ஆரம்பத்தில் ஏப்ரல் 2019 ல் இப்படத்தை திரையரங்கில் வெளியிட தீர்மானித்திருந்தோம். எல்லோருக்கும் தெரிந்தது போல் கொரோனா பொதுமுடக்கத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த இடைப்பட்ட காலத்தில் மிகவும் கடினமான மன அழுத்தம் இருந்தது. பல தடைகள் கடந்து இப்போது பாஸிட்டிவ் விசயங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளது. திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த காமெடி கொண்டாட்டமாக இத்திரைப்படம் இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரிடம் இருந்தும் படத்திற்கு மிகச்சிறப்பான வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.
நடிகர் MS பாஸ்கர் கூறியதாவது…
இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் திரைப்படமாக இருக்கும். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் படப்பிடிப்பில் எனக்கு  முழு சுரந்திரத்தை தந்தார். எனது சிறிய பரிந்துரைகளை, நான் சொன்ன  சிறு வசனங்களை, எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். பத்திரைக்கை மற்றும் ஊடக நண்பர்கள் எங்கள் கடின உழைப்பிற்கு உங்கள் ஆதரவை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
Previous Post

தேனிலவுக்கு சென்ற யோகிபாபு மனைவியை காணோம்…

Next Post

பேய் வேடத்தில் மீரா மிதுன் நடிக்கும் ” பேய காணோம் ”  செல்வ அன்பரசன் இயக்குகிறார்.

Next Post
பேய் வேடத்தில் மீரா மிதுன் நடிக்கும் ” பேய காணோம் ”  செல்வ அன்பரசன் இயக்குகிறார்.

பேய் வேடத்தில் மீரா மிதுன் நடிக்கும் " பேய காணோம் "  செல்வ அன்பரசன் இயக்குகிறார்.

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.