‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது.
இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது.
‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’, பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தனித்துவமான உலக அமைப்புடன் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளையும் வலுவான ஆக்ஷன் களத்தையும் கொண்டுள்ளது.
படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆக்ஷன் காட்சிகளுக்கு இயல்பான தன்மையையும், வித்தியாசமான திரை அனுபவத்தையும் உருவாக்கியுள்ளனர்.
‘வேட்டுவம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் PAN Indian திரைப்படமாக உருவாகியுள்ளது.
திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, அதன் பிரம்மாண்டமான உலகம் மற்றும் பா.இரஞ்சித்தின் இயக்கம் குறித்த எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் இயக்குநராக பா.இரஞ்சித் இருப்பதால், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அறிவிப்பும் பல்வேறு திரையுலக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
திரைக்கதையை எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளார். வசனம் – ப்ராங்ளின்.









