• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது.

by Tamil2daynews
September 17, 2021
in சினிமா செய்திகள்
0
சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது.
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

கிருஷ்ஷின் இசையில், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் பாடியுள்ள RARA திரைப்படத்தின் முதல் பாடலான சீரா சீரா பாடலை மனதைத் தொடும் வரிகளுடன் யுகபாரதி எழுதியுள்ளார்.
சமூக நடப்புகளை நையாண்டி செய்யும் விதமான எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video-இல் செப்டம்பர்-24 அன்று பிரத்தியேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்
சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப்
நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்கு சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, செப்டம்பர்-17, 2021 – ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கிராமப் பின்னணியுடன் கூடிய, மனதைத் தொடும் வரிகளைக் கொண்ட சீரா சீரா பாடல் Amazon Prime Video-இல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் செப்டம்பர்-24 2021 அன்று வெளியிடப்பவுள்ளது.

மகாலிங்கம், ராஜேஸ்வரி & க்ருஷ் ஆகியோர் பாடியுள்ள இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். சீரா சீரா கிராமப்புற சூழலில் உங்களைப் பயணிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல் ஆகும். வாழ்க்கையின் எளிய சிறுசிறு சந்தோஷங்களை இப்பாடல் அழகாகப் படம் பிடித்துள்ளது. பசுமையான வயல்வெளிகள், வளையல் உழும் காளைகள், கிராமத்து மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் விதம் ஆகியவற்றைக் காண்பது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

Song Link: https://youtu.be/aUxMNGgqGzs

இந்த பாடலைப் பற்றி RARA திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், “உலகின் மிகவும் துடிப்பான நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு பாடலை நாங்கள் வழங்க விரும்பினோம்.” என்று ராஜசேகர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மேலும், கிராமத்தில் நாம் அனுபவிக்கும் பழமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய பண்பாட்டின் சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடலை அமைக்க விரும்பினோம். சீரா சீரா கிராமிய வாழ்க்கையை அழகாக வெளிப்படுத்திப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை மகாலிங்கம், ராஜேஸ்வரி & க்ருஷ் ஆகியோர் தங்கள் மனம் மயக்கும் குரலில் பாடியுள்ளனர். கிருஷ் ஒரு பிரபல பாடகர் என்பது நான் அறிந்ததே, இத்திரைப்படத்தின் மூலம் அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். நாட்டுப்புற இசையை நவீன இசையுடன் இணைத்து மிக அற்புதமாக வழங்கியுள்ளார். சீரா சீரா பாடல் எங்கள் மனதை மயக்கியது போலவே பார்வையாளர்களின் மனதை உருக்கும் பாடலாக அமையும் என நான் நம்புகிறேன்.” என்றார்

அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை, 2 டி என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime vIdeo-இல் வெளியிடப்பட உள்ளது.

Previous Post

கொத்தடிமைகளாக ஓமன் நாட்டில் சிக்கிக்கொண்ட தமிழர்களை நாம் தமிழர் கட்சியினர் மீட்டனர்!

Next Post

ACTOR PRADEEP LATEST STILLS

Next Post
ACTOR PRADEEP LATEST STILLS

ACTOR PRADEEP LATEST STILLS

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.