• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்*

by Tamil2daynews
December 14, 2021
in சினிமா செய்திகள்
0
*ராதே ஷியாமின் புதிய பாடலான ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமூட்டும் பிரபாஸ்*
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள காதல் ததும்பும் ‘ராதே ஷியாம்’ திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதே ஷியாமில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘ஆகூழிலே’ என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். ‘தரையோடு தூரிகை’ என்கிற மற்றொரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தற்போது மூன்றாவாது பாடலான ‘ரேகைகள்’-ன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள கண்ணைக் கவரும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
ஆர்வத்தை தூண்டும் ‘ரேகைகள்’ போஸ்டரில் பனி சறுக்கில் பரவசமுடன் பிரபாஸ் ஈடுபட்டுள்ளார். பிரத்யேக வடிவைமக்கப்பட்ட அவரது உடை, காட்சியின் பின்னணி உள்ளிட்டவை பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ரேகைகள்’ பாடலின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.
‘ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாள்கிறார். தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாகவுள்ளது.
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது.
Previous Post

Sila Nerangalil Sila Manithargal Audio Launch Event

Next Post

*’புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

Next Post
*’புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

*'புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

Popular News

  • டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • டியூட் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : ‘தி டார்க் ஹெவன் ‘படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

October 18, 2025

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

October 18, 2025

“‘டீசல்’ படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது”- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

October 18, 2025

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

October 18, 2025

டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025

பைசன்(காளமாடன்) -விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.