ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ரெஜினா – விமர்சனம்

by Tamil2daynews
June 23, 2023
in விமர்சனம்
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரெஜினா – விமர்சனம்

 

இளைய கதாநாயகர்களில் ஆரம்பித்து முதிய கதாநாயகர்கள் வரை நடித்தும் பிறகு விஷால் கூட லத்தி திரைப்படத்தில் நடித்தும் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் முன்னனி நடிகையாக விட வேண்டும் என்று கடினமாக முயற்சி செய்கிறார் நடிகை சுனைனா.

அவரது முயற்சிக்கு இந்த ரெஜினா படம் கை கொடுத்ததா,இல்லையாபார்க்கலாம்.

மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். சதீஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்த, படத்தையும் தயாரித்துள்ளார்.

ரித்து மந்திரா, ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, சாய் தீனா, நிவாஸ் அதிதன், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக புரட்சிகரமான பெண்ணாக சுனைனா இப்படத்தில் தோன்றும் வகையிலான போஸ்டர்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது.
Regina Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimesதன் காதல் கணவனை இழக்கும் ஆதரவற்ற பெண்ணான ரெஜினாவுக்கு எவ்வளவோ நியாயம் கேட்டும் காவல் நிலையத்தின் கதவுகள் சாத்தப்படுகின்றன. இச்சூழலில் ரெஜினா எடுக்கும் முடிவுகள் என்ன, அவற்றின் விளைவுகள் என்ன என்பதே மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் நாம் பார்த்து சலித்த கதையை பெண் மையப்படுத்தி, புரட்சிகரமாக எடுக்க நினைத்திருக்கிறார்கள்.. ஆனால் அதன் விளைவுகளோ அதற்கு நேர்எதிராக இருக்கிறது!

சுனைனாவின் ஆக்‌ஷன் அவதாரம்!

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆக்‌ஷன் அவதாரத்தில் சுனைனாவை போஸ்டர்கள், ட்ரெய்லரில் பார்த்துவிட்டு படுஆர்வமாகி படத்துக்குச் சென்றால் மிகப்பெரும் ஏமாற்றம்! எமோஷனல் காட்சிகளில் முயன்றவரை சுனைனா நியாயம் சேர்த்துள்ளார். ஆனால் புரட்சிப் பெண், ராக் ஸ்டார் வகையறா கதாபாத்திரத்தில் போராடி சுனைனாவை திணிக்க முயன்றிருக்கிறார்கள். பெட்டர் லக் சுனைனா!

பவா செல்லதுரைக்கு தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் இருந்து இயக்குநர்கள் சிறிது காலம் ஓய்வு தர வேண்டும். மலையாள பிக்பாஸ் புகழ் நடிகை ரித்து மந்த்ராவுக்கும் கிட்டத்தட்ட  இதேபோன்ற கதாபாத்திரம்.
The intriguing teaser of Sunaina's new thriller 'Regina' is doing rounds! - News - IndiaGlitz.comமலையாள இயக்குநர் டொமின் டி செல்வாவின் முதல் தமிழ் திரைப்படம். ஆனால் மலையாள திரைப்படம் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது. பெண் மைய படம் என்று சொல்லி ஆண்மையவாத பார்வையிலேயே படம் செல்கிறது. சதீஷின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை, திக்குத் தெரியாத திரைக்கதையுடன் சேர்ந்து பின்னணி இசையும் தூக்கத்தையே வரவழைக்கிறது.

கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது. இடைவெளி வரையிலுமே என்ன சொல்ல வருகிறார்கள், எங்கே படம் பயணிக்கிறது எனத் தெரியாமல் நம்மை சோர்வடையவைக்கிறார்கள்.

மேலும், ரெஜினாவுக்கு தோள்கொடுக்கும் தோழர்கள், திருநங்கை என அனைத்தும் உச்சக்கட்ட செயற்கை. இதற்கு மேல் சிங்கம், புலி என பஞ்ச் டயலாக் பேசவிட்டு சுனைனா ரசிகர்களையே காண்டாக்குகிறார்கள்!

மொத்தத்தில்  இதற்கு முன் பார்த்த சுமாரான திரைப்படம் பரவாயில்லை என உணரவைத்துவிட்டார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வந்த இந்த ரெஜினா – ஏமாற்றம்!
Previous Post

அழகிய கண்ணே – விமர்சனம்

Next Post

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி

Next Post

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!