• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சத்யராஜ்-சசிகுமார் நடிப்பில் வெளிவருகிறது எம்ஜிஆர் மகன்

by Tamil2daynews
April 16, 2021
in சினிமா செய்திகள்
0
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தனது முந்தைய திரைப்படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்றிலுமே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாக தந்த இயக்குநர் பொன்ராம், தனது புதிய படைப்பான எம்ஜிஆர் மகன் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், “100%  பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம்” என்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தை பற்றி உற்சாகத்துடன் பேசும் பொன்ராம், “ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), எம்ஜிஆர்-அன்பளிப்பு ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,” என்றார்.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பொன்ராம்.
தயாரிப்பு நிறுவனம்: ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட்
நடிகர்கள்: சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராமச்சந்திரன், நமோ நாராயணன், சூப்பர் குட் சுப்பிரமணி, நந்திதா சுவேதா (கவுரவ வேடம்)
இயக்குநர்: பொன்ராம்
ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி
இசை: அந்தோனி தாசன்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
தயாரிப்பு வடிவமைப்பு: ஜி துரை ராஜ்
சண்டை காட்சிகள்: ஸ்டண்ட் சில்வா
நடனம்: தினேஷ், பிருந்தா, தினா
பாடல்கள்: யுகபாரதி, அந்தோனி தாசன், கடல் வேந்தன், முருகன் மந்திரம்
நிர்வாக தயாரிப்பு: கே எஸ் செந்தில்குமர்-சித்தார்த் ராவ்
புகைப்படங்கள்: கோமளம் ரஞ்சித்
வடிவமைப்பு: கிளிண்டன் ரோச். எஸ்
உடைகள் வடிவமைப்பு: அஷ்வினி கிருஷ்ணா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
Previous Post

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு

Next Post

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts  நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது ! 

Next Post
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும் , Trident Arts  நிறுவனத்தின் “Production No 7” பூஜையுடன் துவங்கியது ! 

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.