• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மகர சங்கராந்தியை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!

by Tamil2daynews
January 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மகர சங்கராந்தியை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!

 

மும்பை, 16 ஜனவரி 2026: இந்த மகர சங்கராந்தியை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான தனது தெலுங்கு திரைப்பட பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பெருமையுடன் வெளியிடுகிறது. திரையரங்குகளில் வெளியான பின்னர் நெட்ஃபிலிக்ஸ் மூலம் பார்வையாளர்களை சென்றடைய உள்ள இந்தத் திரைப்படங்கள் பிரமாண்டமான காட்சிகள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களை உள்ளடக்கியது. தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டம், வித்தியாசமான கதைகள் இவை அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் தளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் மாஸ் என்டர்டெயினர்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் ஆகிய ஜானர்களில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பைப் பெற்றன. ’புஷ்பா2’, ‘ஹிட்3’, ‘தே கால் ஹிம் ஓஜி’ போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களும், ’கோர்ட்: ஸ்டேட் vs அ நோபடி’. ’தி கேர்ள்பிரண்ட்’ போன்ற தரமான படைப்புகளும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி பேசுபொருளானது.
Netflix Ushers in 2026 with Telugu Cinema's Biggest Stars this Makar Sankranti ! - Moviewingz.comஉச்ச நட்சத்திரங்களின் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான கதைகள் இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறது. நடிகர் பவன் கல்யாணின் ’உஸ்தாத் பகத் சிங்’, நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’, நடிகர் துல்கர் சல்மானின் ’ஆகாசம்லோ ஒக தாரா’, நடிகர் பகத் பாசிலின் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பீரியட் ஆக்ஷன் படமான ’VD14’, நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதர்ஷ குடும்பம்- ஹவுஸ் நம்பர்: 47’, நடிகர்கள் ராம் சரண், ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ள ‘பீடி’ என வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகள் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

மாஸ் மற்றும் வலுவான கதைகளுடன் கூடிய இந்தத் திரைப்படங்களில் ஆக்ஷன், பிரமாண்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் என அனைத்தும் உள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது,
“பிரமாண்டம், துணிச்சலான கதைகள் மற்றும் ஆழமான உணர்வுப்பூர்வமான கதைகள் என தெலுங்கு சினிமா அதன் ரசிகர்களுடன் நல்ல பிணைப்பை கொண்டுள்ளது. பிரம்மாண்டம், எண்டர்டெயின்மெண்ட், வலுவான கதைகள், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் என இந்த வருடம் 2026-ல் பல தரமான படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ’புஷ்பா2’, ‘ஹிட்3’, ‘ஓஜி’, ‘கோர்ட்’ போன்ற படங்கள் இதற்கு சான்று. இந்த கதைகளை பெரிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களது நோக்கம்” என்றார்.

2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:

• உஸ்தாத் பகத் சிங்: பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• தி பாரடைஸ்: நானி, கயாடு லோஹார் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• ஆகாசம்லோ ஒக தாரா: துல்கர் சல்மான் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• சாம்பியன்: ரோஷன், அனஸ்வரா ராஜன் (தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம்),
• டோன்ட் டிரபுள் தி ட்ரபுள்: பஹத் ஃபாசில் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• ஃபங்கி: விஷ்வக் சென், கயாடு லோஹார் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• புரொடக்ஷன் நம்பர் 37: ஹர்ஷ் ரோஷன், அன்னா பென் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• ராக்காசா: சங்கீத் ஷோபன் (தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம்),
• தி பைக்கர்: ஷர்வானந்த், அதுல் குல்கர்ணி, பிரம்மாஜி, மால்விகா நாயர் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• 418: சைத்ரா அர்ச்சர், ஸ்ரீ வைஷ்ணவ், ஷஷாங்க் பட்டில் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• VD14: விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கித்ரியான், ராஷ்மிகா மந்தானா (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)
• ஆதர்ஷ குடும்பம் – ஹவுஸ் நம்பர்: 47 – வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பீடி: ராம் சரண், ஜான்வி கபூர் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)

Previous Post

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி

Next Post

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

Next Post

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெல்-விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • *மார்கழித் திங்கள்*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.