‘ரிப்பப்பரி’ – விமர்சனம்
சுத்தி வளைச்சி அடிக்கிற வெயிலுக்கு ஜாலியா ஏசில உட்கார்ந்து ஒரு படம் பாக்கணும்னா இந்த படத்துக்கு நிச்சயமா போகலாம்.
கதை
ஆரம்பத்தில் ஒரு நாய் பொம்மைக்குள் இருந்து வரும் பேய் ஒரு காதல் ஜோடியின் காதலனை கொன்றுவிடுகிறது. கதையின் நாயகன் ராஜ் மற்றும் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து யூடியூபில் சமையல் சேனல் வைத்திருக்கின்றனர், அதில் கமெண்ட் மூலமாக Gold Fish என்ற பெண்ணை கதையின் நாயகன் ராஜ் காதலிக்கிறார்…
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராஜின் உதவியை நாடி அவரின் நண்பன் ஒருவர் வருகிறார் கூடவே அவரின் காதலியையும் கூட்டி வருகிறார், எதிர்பாராத விதமாக அந்த நண்பர் பேயால் கொல்லப்பட்டு இறந்துவிடுகிறார், பிறகு போலீஸ் இந்த மூன்று நண்பர்களுக்கும் அந்த பேயை பற்றி கூறிவிட்டு , அந்த பேய் தலைக்கரை ஊரில் சாதி காதலால் இறந்த பேய் என்று இந்த மூன்று நண்பர்களையும் அந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர் கூடவே அந்த பேயை கண்டறியும் ஒரு பொம்மையையும் கொடுத்து அனுப்புகிறார் , ஆனால் நாயகன் ராஜ் அவரின் காதலி Gold Fish அதே ஊர் என்பதை தெரிந்து கொண்டு அவரை தேட ஆரம்பிக்கிறார்.
கடைசியில் இந்த மூன்று பேர் அந்த பேய் யார் என்பதை கண்டுபிடித்து அந்த கொலைகளுக்கான காரணத்தையும் கண்டுபிடித்தார்களா ? இல்லையா என்பதும் நாயகன் ராஜ் அவரின் காதலி Gold Fish ஐ கண்டுபிடித்து தனது காதலை வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை…
இந்த கதையை இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கியுள்ளார்.
இந்த படத்தோட பலமே படத்தோட திரைக்கதை என்று சொல்லலாம் இயக்குனர் ஆடியோ விழாவில் எந்த அளவுக்கு பேசினாரோ அதுல 90% படத்தை சரியான பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்.
மாஸ்டர் படத்தில் பார்த்த மாஸ்டர் மகேந்திரனா இது என்கிற அளவுக்கு அவரின் வழக்கமான நடிப்பு நம்மை கவர்கிறது.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாயகிகள் இருந்தும் படத்தில் ஓரளவு தான் கதாநாயகி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் பாடலை மாஸ்டர் மகேந்திரன் பாடும் பொழுது தியேட்டரில் கைதட்டல்கள் விசில் பறக்கின்றன.
இரண்டாம் பாதியில் தேவையில்லாத இரண்டு மூன்று காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் படம் படு சுவாரசியமாக இருந்திருக்கும். சொல்லப்போனால் இந்த தமிழ் புத்தாண்டில் ரிப்பப்பரி ஒரு வெற்றிப்படம் என்றே சொல்லலாம்.