பானி பூரி – விமர்சனம்
இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணின் திருமண பந்தத்திற்கு, அதுவும் காதல் திருமண பந்தத்திற்கு ஏற்ற திரைப்படம் இந்த பானிபூரி.
ஒரு விவாகரத்தான இளம் மகளின் அப்பாவாக வாழ்ந்து காட்டியுள்ளார். வினோத், கனிகா என அனைவரும் சரியான நடிப்பை தந்துள்ளார்கள். நவநீத்தின் இசை உணர்வுகளை சரியாக கடத்துகிறது. மாறி வரும் குடும்ப மதிப்பீடுகளை சரியாக ஒரு கால கண்ணாடி போல் காட்டியுள்ளது பானி பூரி தொடர். தமிழ் வெப் தொடர் வரலாற்றில் இந்த பானி பூரிக்கு முக்கிய இடம் உள்ளது.
சொல்ல வந்த கதையை அதிகபட்சம் ஒரு மூன்று எபிசோடுகளில் முடிக்கும் இவ்வளவு சின்ன கதையான இந்த பானி பூரியை 8 எபிசோடு வரைக்கும் இழுத்த இயக்குனரின் இழுவை சற்று நம்மை சழுப்படையை வைப்பது நிஜம்.
மொத்தத்தில் தந்தைக்கும் மகளுக்கும் காதலனுக்கும் இடையே உள்ள உறவை வெகு பக்காவாக எல்லோருக்கும் புரியும்படி மிக அழகாக காட்டிய இயக்குனருக்கும் படக் குழுவினர்களுக்கும் ஒரு வாழ்த்துக்கள்.
இந்த ‘பானி பூரி’ பார்க்கலாம் சுவைக்க முடியாது