• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

by Tamil2daynews
March 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

 

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.

கதையின் தேவையை பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டன. கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெற்றது. கடும் வெப்பம் மற்றும் குளிர் என பல சவால்களையும் கடந்து தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்தது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும், கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும் அவை கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பலரும் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. அவர்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவுக்கு இருந்தது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் அன்பும் ஒத்துழைப்பும் வழங்கிய கிராம மக்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ’செஞ்சி’ தனித்துவம்மிக்க ஆன்மிக அம்சத்தையும் கொண்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்த தெய்வம் அருள் வழங்கி தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘மண்டவெட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. வலுவான கதை, அர்ப்பணிப்புள்ள படக்குழு என ‘மண்டவெட்டி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்க இருக்கிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்:
பேனர்: டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்,
தயாரிப்பு & இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்,
ஒளிப்பதிவு: பிரகாஷ் மனிதன்,
படத்தொகுப்பு: குணா பழனிசாமி,
இசை: தீபக் வேணுகோபால்,
சண்டை பயிற்சி: கெளதம்,
ஆடை வடிவமைப்பு: சங்கீதா சென்,
ஒலிக்கலவை: டோனி ஜே ஆண்டனி,
டிஐ கிரேடிங்: பாலகங்காதரன்,
சிஜிஐ: விஜயன்,
புரொடக்ஷன் மேனேஜர்: மகேந்திரன் கந்தசாமி,
ஒப்பனை: நர்மதா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

Previous Post

‘இறுதிப்பக்கம்’ இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர், பூஜையுடன் துவங்கியது!

Next Post

48 மணி நேரத்தில் சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்

Next Post

48 மணி நேரத்தில் சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.