• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு

by Tamil2daynews
March 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு

#LeaderTeaser ▶️ https://youtu.be/2bdOxrr7Kvw


லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது.

ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

Previous Post

ஸ்கிராட்ச் இசை தான் ‘பவழ மல்லி’ சான்ஸ் வாங்கிக்‌ கொடுத்தது – சாய் அபயங்கர்..

Next Post

காதல் ரீசெட் ரிப்பீட் – விமர்சனம்

Next Post

காதல் ரீசெட் ரிப்பீட் - விமர்சனம்

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.