• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

by Tamil2daynews
December 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”  பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில்  அறிமுகமான பிரியங்கா மோகன்  நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார்.   தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Vaishak J Films தயாரிப்பில்,  ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம்,  70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான  ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.

தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான  ஒந்த் கதே ஹெல்லா  Ondh Kathe Hella  படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.
Image‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது.   பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன்,  ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.

தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவுள்ளது.  இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

Previous Post

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

Next Post

ஆஸ்கர்‍-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார்

Next Post

ஆஸ்கர்‍-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனியை வெளியிட்டார்

Popular News

  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.