• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆஸ்கர்‍-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார்

by Tamil2daynews
December 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆஸ்கர்‍-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார்

 

இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்ப‌த்தை டிசம்பர் 27 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள பிக்வயலின்ஷாப்பில் தொடங்கி வைத்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, ‘த்ரிபின்னா’ ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார்.
Imageஇந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ண குமார் மற்றும் பின்னி கிருஷ்ண குமார், வயலின் கலைஞர் குமரேஷ் மற்றும் வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட இசை மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

‘த்ரிபின்னா’ ஆல்பம், ஸ்வரங்களை வரிசையாக மட்டும் இசைக்காமல், அவற்றை பிரித்து பின்னர் ஒன்றாக இணைக்கும் ஒரு பழங்கால கர்நாடக இசைக்கருத்திலிருந்து உருவாக்கப்பட்டது ஆகும். ஆரம்பகால கமகம் கருத்துகளில் வேரூன்றிய இந்த ஆல்பம், ஒரு ராகத்திற்குள் பல ஸ்வரங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை ஆராய்ந்து, இந்திய பாரம்பரிய சூழலில் விரிவான இசை அமைப்புகளை உருவாக்குகிறது. இந்த அணுகுமுறையின் மூலம், இந்த ஆல்பம் ராகத்தின் வெளிப்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதோடு, பாரம்பரியமும் கற்பனையும் ஒரு பெரிய இசைக்களத்தில் இணையும் இந்திய சிம்பொனியை உருவாக்குகிறது.
Imageகர்நாடக இசையின் வேர்களைப் பாதுகாப்பதில் கணேஷ் ராஜகோபாலனின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ‘த்ரிபின்னா’ ஆல்பம் பிரதிபலிக்கிறது. இந்த ஆல்பத்தில் கணேஷ் ராஜகோபாலனின் மாணவர்களான ஸ்வரயோகா குழுவினர், மேலும் புகழ்பெற்ற கலைஞர்களான பத்ரி சதீஷ் குமார், ஓஜஸ் ஆத்யா, திருச்சி கிருஷ்ணசாமி மற்றும் சுவாமிநாதன் செல்வ கணேஷ் ஆகியோர் பங்காற்றியுள்ளனர்.

இந்த ஆல்பம் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கிறது.

Previous Post

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

Next Post

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!

Next Post

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.