• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் (vintage)தோற்றம் வெளியானது

by Tamil2daynews
February 4, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  (vintage)தோற்றம் வெளியானது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

கன்னட திரைப்படமான ‘முகில்பேட் ‘ ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் – அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பள்ளிச்சட்டம்பி – கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Imageஇதற்கிடையில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம்-  ஏப்ரல் மாதம் 9 தேதி வெளியாகிறது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் ( Worldwide Films) மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் ( C Qube Bros Entertainment) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம்  ஒரு முழுமையான மாஸான ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோஷன் போஸ்டர் – டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெறும் வீடியோக்கள்.. ஆகிய அனைத்தும் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.

இப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh ), இவர்களுடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சானுக்யா – சைதன்யா-  மற்றும் சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். பள்ளிச்சட்டம்பி எனும் இந்த திரைப்படம் 1950-60 காலகட்டத்தில் கேரளாவில் நடக்கும் ஒரு கதையை சொல்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர்ருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Previous Post

வித் லவ் – விமர்சனம்

Next Post

“சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !

Next Post

“சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.