• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் ( BIKER) பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

by Tamil2daynews
March 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஷர்வானந்த் நடிக்கும்  பைக்கர் ( BIKER)  பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது..,
இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார்.
Imageபுரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது..,
இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.

ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,
இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
Imageஇயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது..,
இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.

அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.

நடிகர் நிரூப் பேசியதாவது..,
இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி.

நடிகை மாளவிகா பேசியதாவது..,
சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.

டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,
நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.
Imageநடிகர் ஷர்வானந்த் பேசியதாவது..,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.

இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி
வழங்குபவர்: விக்ரம் ரெட்டி
தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி,  பிரமோத் உப்பலபாட்டி
இசை: ஜிப்ரான்
நிறுவனம்: UV Creations
ஒளிப்பதிவு: J. யுவராஜ்
புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்
எடிட்டர்: அனில் பசலா
கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்
எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஷ்ரவன் மாதாலா
ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்
நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு
ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Previous Post

எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

Next Post

“கெணத்த காணோம்” — உணர்ச்சிப்பூர்வமான வெற்றி: யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

Next Post

“கெணத்த காணோம்” — உணர்ச்சிப்பூர்வமான வெற்றி: யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.