• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

by Tamil2daynews
May 24, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே  நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி- The India Story ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சேட்டன் DK   இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்-  இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.
ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்… இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.

தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமித் பாகடே -அனிதா ஜாதவ்- விநாயக் சைதானி-  கல்பேஷ் ஷா – தேவ்யானி கொராடே  மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக  பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி  பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது

Previous Post

கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

Next Post

AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!

Next Post

AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.