• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழின் சிறந்த உளவியல் த்ரில்லர் கதைகளில் ஒன்றாக வெளியாகியுள்ள ‘ஸ்டீபன்’ தற்போது நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டிரெண்ட்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் உள்ளது!

by Tamil2daynews
December 12, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழின் சிறந்த உளவியல் த்ரில்லர் கதைகளில் ஒன்றாக வெளியாகியுள்ள ‘ஸ்டீபன்’ தற்போது நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டிரெண்ட்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் உள்ளது!

 

மும்பை: உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும்  உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், இலங்கை, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய முதல் 10 படங்கள் பட்டியலில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’ஸ்டீபன்’ இப்போது ஏழாவது இடத்தில் உள்ளது.

‘ஸ்டீபன்’ படத்தை சிலாகித்து சமூகவலைதளங்களில் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, மற்ற க்ரைம்-த்ரில்லர் ரசிகர்களை ஈர்ப்பதோடு கோமதி சங்கரின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் கதையை சுற்றியுள்ள பரபரப்பு, பல அடுக்குகள் கொண்ட கதை என இந்த வாரம் வெளியான வெற்றி கதைகளில் ஒன்றாக ‘ஸ்டீபன்’ உள்ளது.

படத்தின் வரவேற்பு குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான மிதுன் பாலாஜி மற்றும் நடிகரும் இணை எழுத்தாளருமான கோமதி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “படத்திற்கு இந்த வாரம் கிடைத்துள்ள வரவேற்பு நம்பமுடியாத அளவும் மொத்த அணியினருக்குமே ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்தப் படத்தை உருவாக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய நேர்மை, முயற்சி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு சரியான வெகுமதியை பார்வையாளர்கள் கொடுத்துள்ளனர். படத்தின் கதை, அதன் தீம், கதாபாத்திரங்கள் என பார்வையாளர்கள் பொதுவெளியில் இதைப்பற்றி பேசுவதும் விவாதிப்பதும் எங்களை அங்கீகரிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. *உலகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து தரப்பு பார்வையாளர்களும் ‘ஸ்டீபன்’ படம் மீது செலுத்தும் அன்பு நெகிழ்ச்சியாக உள்ளது.* ‘ஸ்டீபன்’ மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றனர்.

புதிய பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் கடைசி ஃபிரேம் வரை பரபரப்பான உளவியல் த்ரில்லர் கதையாக ‘ஸ்டீபன்’ வெளியாகியுள்ளது. இதுபோன்ற புதுமையான உளவியல் த்ரில்லர் கதைகளை கொடுத்து புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் களமாக நெட்ஃபிலிக்ஸ் உள்ளது.

‘ஸ்டீபன்’ படத்தை இப்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் பாருங்கள்!

Previous Post

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!

Next Post

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!

Next Post

கோவில்பட்டியில் தொடங்கியது சிம்புவின் அரசன் படப்பிடிப்பு!

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.