• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | பான்-இந்தியா வெளியீடாக இந்த கோடையில் வெளியாகிறது !!

by Tamil2daynews
January 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக  நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது  | பான்-இந்தியா வெளியீடாக  இந்த கோடையில் வெளியாகிறது !!

 

“நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின்  கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா  நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும்  நாயகி நபா நடேஷின்  (Nabha Natesh) ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய சேலை, நுட்பமான ஆபரணங்கள், அமைதியான முகபாவனை—அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

போஸ்டரில் படத்தின் தரத்தை களத்தை வெளிப்படுத்தும் வகையில், நாயகி அருகே நீல நிறப் பறவை, ஒரு பிரம்மாண்ட மயில் மற்றும் கோவில் பின்னணி இடம் பெற்றுள்ளன. ‘பார்வதி’ கதாபாத்திரத்தின் ஆன்மிக அடையாளத்தையும், படத்தின் கருப்பொருளையும் இந்த ஒரே போஸ்டர் அழகாக எடுத்துரைக்கிறது.
Imageஇந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, B. S. அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் நாகபந்தம் திரைப்படம், நம் மரபின் புனித ரகசியங்களை மையமாக வைத்து, புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது.

ஒளிப்பதிவு சௌந்தர் ராஜன் S,  எடிட்டிங்  RC பிரணவ்,  கலை இயக்கம் அசோக் குமார் என முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால், படம் மிகச் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கிஷோர் அன்னபூரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் நாகபந்தம், இந்த கோடைக்காலத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

நடிப்பு:
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்தொழில்நுட்ப குழு
கதை / திரைக்கதை / இயக்கம்: அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள்: கிஷோர் அன்னபூரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன் S
இசை: அபே, ஜுனைத் குமார்
கலை இயக்கம்: அசோக் குமார்
எடிட்டிங்: RC பிரணவ்
சிஇஓ: வாசு போதினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Previous Post

அனந்தா – விமர்சனம்

Next Post

மண்ணின் மணம்… கண்ணில் தீ… ‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!

Next Post

மண்ணின் மணம்… கண்ணில் தீ… ‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.