• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜாக்கி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

by Tamil2daynews
January 5, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜாக்கி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

 

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது.

‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

‘ஜாக்கி’ திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 3) மாலை நடைபெற்ற 13ம் ஆண்டு வீதி விருது விழாவில் வெளியிடப்பட்டது. டீசரை கண்ட பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்” !!

Next Post

இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா ? – 99/66 ” தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேரரசு !!”

Next Post

இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா ? - 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேரரசு !!”

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.