• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யாவின் 2D Entertainment வழங்கும்   “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

by Tamil2daynews
December 16, 2019
in சினிமா செய்திகள்
0
சூர்யாவின் 2D Entertainment வழங்கும்   “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !
0
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து,வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது.

கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது.

ஒரு சிறு டீஸர் மூலமாகவே  இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை   சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக ( Sakthi film factory signature release ) இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

 

 


2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து  தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள  படங்களை  கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு  தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக  இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “சில்லுக்கருப்பட்டி”  படத்தின் மீதான  ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன CEO ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளியீடு  ( Sakthi film factory signature release ) என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, சினிமாவை பெரும் காதலுடன் அணுகும் படங்களை மட்டும், மிக கவனமுடன் தேந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு,  பிரத்யேகமாக இந்த அடையாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும். இந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் “சில்லுக்கருப்பட்டி” என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை மிகச்சரியான தேதியில் மிகப்பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிர்வாகி சக்திவேலன்.


இயக்குநர் ஹலிதா சமீம் கூறியதாவது…
நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் “சில்லுக்கருப்பட்டி” படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார்,  ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை என்றார்.

“சில்லுக்கருப்பட்டி” நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

Tags: Sillukarupatti
Previous Post

Actress Sakshi Agarwal Upcoming Project

Next Post

Raga Dreamworks & Parinati Productions “En Kaadhale” by SPB Musical Night Event Stills

Next Post
Raga Dreamworks & Parinati Productions “En Kaadhale” by SPB Musical Night Event Stills

Raga Dreamworks & Parinati Productions “En Kaadhale” by SPB Musical Night Event Stills

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.