• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அந்தாதூன்’ தமிழ் ரீமேக்:  தபு கதாபாத்திரத்தில் ஆச்சரியப்படுத்தவுள்ள சிம்ரன்

by Tamil2daynews
December 12, 2020
in சினிமா செய்திகள்
0
அந்தாதூன்’ தமிழ் ரீமேக்:  தபு கதாபாத்திரத்தில் ஆச்சரியப்படுத்தவுள்ள சிம்ரன்
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் தான்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு  வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன்  3 தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார்.

தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில்  தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன்,  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’. பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக  இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படமான ‘அந்தாதூன்’ தமிழிலும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

Previous Post

வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது

Next Post

அனபெல் சுப்ரமணியம் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ‘ஜாங்கிரி’ மதுமிதா

Next Post
அனபெல் சுப்ரமணியம் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ‘ஜாங்கிரி’ மதுமிதா

அனபெல் சுப்ரமணியம் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ‘ஜாங்கிரி’ மதுமிதா

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.