• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்!

by Tamil2daynews
February 5, 2021
in சினிமா செய்திகள்
0
எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ்  பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.
இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் பிரைம் டைமில்  OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்று ள்ளது.
‘தேவதாஸ் பார்வதி’ ஒரு  ஆந்தாலஜி படமாகும்.  அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார். அந்தப் பாடலை 2010 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஒரு உலக மகா இசைக்கலைஞனின் இறுதிப்பாடல் தன் படத்தில் இடம் பெற்றதற்காகப் பெருமையும் துயரமும் கலந்த உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறார் இயக்குநர் ஆர்ஜி கே.
இந்தப்படத்தில் ராஜ் எம்.ஆர்.கே நாயகனாக நடித்திருக்கிறார் ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடித்திருக்கிறார் .இவர்கள் தவிர பாரதாநாயுடு, பூர்ணிமா ரவி, ராகுல் தாத்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார் .வினோத் ராஜேந்திரன் ,மனீஷ் மூர்த்தி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்க்குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். என் .வி. அருண் இசையமைத்துள்ளார்.
‘என்னோட பாஷா’ என்கிற அந்தப் பாடலை ஹர்ஷா எழுதியுள்ளார்.தமிழில் எஸ்பிபி பாடிய முதல் பாடலை புலமைபித்தன் எழுதியிருந்தார். இறுதிப்பாடலை  இளைஞர் ஹர்ஷா எழுதியிருக்கிறார்.
இப் படத்திற்காக எஸ்பிபியிடம் பாடக் கேட்டபோது கதையைக் கேட்டு இருக்கிறார். அவருக்குக் கதை  பிடித்துப் போய்விடவே பாடச் சம்மதித்திருக்கிறார். அதே இளமை உற்சாகத்துடன் பாடியும் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடல் பதிவான அனுபவத்தை எண்ணி எண்ணி படக்குழுவினர் நெகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பாடலை  இயக்குநர்கள் கே.எஸ் .ரவிக்குமார்,விக்னேஷ் சிவன், அரசியல்வாதி எச்.ராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,பிரியா வாரியார் ,தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் போன்ற பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பிரமாண்டமான வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
 ‘தேவதாஸ் பார்வதி’ ஒரு பைலட் திரைப்படம். இதன் விரிவான முழுநீள திரைவடிவம் விரைவில் உருவாக இருக்கிறது.பைலட் திரைப்படம் என்றாலும் பிரம்மாண்டமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
 தன் இறுதிப்பாடலை எஸ்பிபி பாடியதன் மூலம் தங்கள் படத்திற்கு ஒரு அழுத்தமான முகவரியைக் கொடுத்து சென்றுள்ளார் என்று பூரித்துக் கொண்டு இருக்கிறது படக்குழு.
SONG LINK
https://youtu.be/wwb8rMFlTc8
Previous Post

அமேசான் ப்ரைம் வீடியோ மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2

Next Post

*மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் ரிலீசான உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘கேரளா பாரடைஸோ’ படம்..!*

Next Post
*மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் ரிலீசான உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘கேரளா பாரடைஸோ’ படம்..!*

*மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் ரிலீசான உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா 'கேரளா பாரடைஸோ' படம்..!*

Popular News

  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.