• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

by Tamil2daynews
February 7, 2020
in சினிமா செய்திகள்
0
சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !
0
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங்கள் குறிப்பிடதகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

 

Creative Entertainers & Distributors நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதவாது…

நடிகை சுமன் ரங்கநாதன் எங்கள் படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. முன்னதாக நாங்கள் நடிகை பூஜா குமாரை இந்தக்கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்திருந்தோம் அவரும் இக்கதாப்பத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவரே, ஆனால் அவரின் அவசரமான அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது கன்னட பதிப்பில் இந்தக்கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட சுமன் ரங்கநாதன் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

சுமன் ரங்கநாதன் வெகு அற்புதமான நடிப்பால் இந்தகதாப்பாத்திரத்தில் ரசிகர் மனங்களை வென்றிருந்தார். தமிழிலும் அவர் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்ப்பார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அவர் அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம். தமிழில் சில குறிப்பிடதகுந்த வெற்றிபடங்களுக்கு பிறகு அவர் கன்னடத்தில் பிஸியாகிவிட்டார். இப்போது தமிழுக்கு அவரை அழைத்து வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழில் அவர் பங்குபெறும் பகுதியின்  படப்பிடிப்பு  முழுதாக முடிந்து விட்டது. சென்னையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் அவர் பங்குபெற்ற பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஜான் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து தனஞ்செயன் தழுவிய  திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார்.  ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Tags: KabadadaariPooja KumarSibirajSuman Ranganathan
Previous Post

‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ –  வடபழனியில் உலகதரத்தில் ஒரு ஆடியோ ஸ்டுடியோ உதயம்

Next Post

அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா!

Next Post
அபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா!

அபி சரவணனுடன் 'மாயநதி' படம் பார்த்தார் பரவை முனியம்மா!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.