• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் Man Vs Wild

by Tamil2daynews
January 30, 2020
in சினிமா செய்திகள்
0
சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் Man Vs Wild
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி
டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பில்

அகில உலக அளவில் புகழ் பெற்ற  டிஸ்கவரி  தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த  காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில்  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .

பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய சரணாலயத்தில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம் உலகெங்கிலும் பேசப்பட்டது.

இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில் Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன்  கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.  இது ரஜினிகாந்த்  அவர்கள் பங்கு பெரும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் சின்ன திரைக்கு அவரை முதன் முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில் பெருமை கொள்கிறது .

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்தும் வகையில் நம் சூப்பர்ஸ்டார்  இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் . நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்.

Discovery குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் Bear Grylls மற்றும்  சூப்பர்ஸ்டார் இணைந்து செய்யும் சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று உறுதி கூறுகிறார் .

Bear Grylls கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது.  அவருடைய எளிமை, பொறுமை,  பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்”.

Tags: Superstar Rajinikanth
Previous Post

“சின்ன பட்ஜெட் படங்களுக்கு தடங்கல் கூடாது” ; தமிழக அரசுக்கு நடிகை வசுந்தரா கோரிக்கை

Next Post

‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’!

Next Post
‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’!

'மிஸ் இந்தியா 2020' அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் 'பாஷினி பாத்திமா'!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.