நடிப்பு : விவேக் ராஜ் , மோனிகா சின்னகொட்லா
தயாரிப்பு : உஷா சினி கிரியேஷன்ஸ் , ரஷாந்த் கிரியேஷன்ஸ்
இயக்கம் : நாகேஸ்வரன்
இசை – நோவா
வெளியான தேதி – 3 ஜனவரி 2020
நேரம் – 1மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் – 2.50/5
தமிழ் சினிமாவில் இன்னும் சொல்லப்படாத காதல் கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த விதத்தில் இந்தப் படத்தின் கதையும் சொல்லப்படாத ஒரு கதையாகத்தான் இருக்கிறது.
நாகர்கோவில் அருகில் உள்ள கிராமத்தில் மெடிக்கல் ரெப் ஆக இருப்பவர் படதின் கதாநாயகன். அந்த கிராமத்திற்க்கு சென்னையில் இருந்து NSS கேம்ப் வந்துள்ள கதாநாயகி . விவேக்கின் குணத்தை கண்டு காதல் வயப்படுகிறார். சில நாட்கள் கழித்து விவேக் சென்னை செல்கிறார், செல்லும் வழியில் மோனிகாவிற்க்கு திருமணம் என தெரிகின்றன. பின் அவருடைய மொபைல் போன் தொலைந்து விடுகிறது. மோனிக்காவால் விவேக்கை
தொடர்புகொள்ள முடியவில்லை.
இவர்கள் மீண்டும் சந்தீத்தார்காளா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதி கதை.
கிராமத்து இளைஞனாக விவேக் நன்றாக பொருந்தியிருக்கிறார். மேலும் காதல் காட்சிகளில்
நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் சண்ணடை காட்சிகளிகளும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்
கதாநாயகி மோனிக்காவின் யதார்த்த நடிப்பு சில இடங்களில் ரசிக்கிற மாறி இருந்தாலும் சில இடங்களில் சற்று குறைவாக தெரிகிறது. மேலும் விவேக்கின் அம்மாவாக சீதா எப்பவும் போல தன் நடிப்பை காட்டியிருக்கிறார். சிங்கல்புலி நகைச்சுவை படதில் சிறப்பாக இல்லை. வில்லான வரும் ராஜசிம்மா உண்ணமாயா வில்லானா என நம்ப சில நிமிடம் தேவைபடுகிறது. இயக்குனர் நாகேஸ்வரன் மேலும் திரைகதையில் கூடுதல் வேகம் கூட்டியிருக்கலாம்.
இசையமைப்பாளர் நோவா அறிமுகமாக இருந்தாலும் பாடல்கள் கேட்கும் விதத்தில் அமைத்திருக்கிறார்.
அனைவரும் அறிமுகாமாக இருந்தாலும் இது ஒரு முதல் படியாக எண்ணி இன்னும் சற்று நடிப்பிலும், கதையிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.