தன்னுடைய காமெடிகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி.
அவரின் காமெடிகள் மூலம் சிரித்த அனைவரும் இப்போது துக்கத்தில் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் நடிகர்.
பாலாஜி இ றந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி அவரது உடல் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலாஜி உயிரிழந்தது குறித்து ஒரு பேட்டியில் அமுதவாணன் பேசும்போது, அவரது மரணம் இன்னும் அதிர்ச்சியாகவே இருந்தது.
அது இது எது 2ம் சீசன் செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். Mr-Mrs நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து வித்தியாசமாக நடனம் ஆட ஆசையாக இருந்தார். அது நிறைவேறாமல் அவர் உயிரிழந்துள்ளார் என வருத்தமாக பேசியுள்ளார்.