• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பர்ஸ்ட்லுக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ” லாக் ” ..!

by Tamil2daynews
March 27, 2022
in சினிமா செய்திகள்
0
தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பர்ஸ்ட்லுக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ” லாக் ” ..!
‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின்  அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின்  பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ்,  ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ லாக்’ திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளன.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள் .சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.
இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா ?கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.இல்லாவிட்டால்  அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே ‘லாக் ‘ படத்தின்  கரு.சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்து விடுகிறார்கள்.

அந்த நகரத்தில் சைக்கோ காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் காமப்பசிக்காக ஜூலி மீது கண் வைக்கிறார்கள். மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்? என்பதைப் பரபரப்பாக சொல்லும் படம்தான் லாக்.

அடுத்தடுத்து முடிச்சுகள்,திருப்பங்கள் எனக் கதை நகர்கிறது. இப்படி ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படமாக லாக் உருவாகியுள்ளது.

இப் படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே சில படங்களில் தோன்றிய அனுபவம் உண்டு.

இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன்  லிங்கா ஏற்கெனவே ‘அட்டு’  என்ற படத்தை இயக்கி,அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஒளிப்பதிவு – நந்தா ,இசை -விக்ரம் செல்வா ,எடிட்டிங் – மகேந்திரன் கணேசன்.

ஒரு முழுநீள விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லராகவும் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் லாக் செய்து விடும் அளவுக்குத் திகிலும் திருப்பங்களும் கொண்ட படமாகவும் ‘ லாக் ‘ உருவாகியிருக்கிறது .

விரைவில் விறு விறு திரை அனுபவத்துக்கு ரசிகர்களை  அழைத்துச் சென்று வியக்க வைக்க வருகிறது ‘லாக்’.
 இன்று இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .’லாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Previous Post

ஜூலை 14ல் பிரம்மாண்டமாக தி வாரியர் வெளியீடு..!

Next Post

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

Next Post
தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

Popular News

  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • அமரம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.