WEB – விமர்சனம்
வேலன் புரொடக்ஷன் சார்பாக VM முனிவேலன் தயாரிப்பில், ஹாரோன் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில், நட்டி நட்ராஜ் – ஷில்பா மஞ்சுநாத் – அனன்யா மணி – ஷாவி பாலா – சுபப்ரியா மலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘WEB'(வலை)’.
அபிநயா,நிஷா,மகா மூன்று பேரும் இணை பிரியா தோழிகள் மூன்று பேரும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் நெருங்கிய தோழிகள்.
வார இறுதி நாட்களை குடியும் கூட்டமாக கும்மாலமிட்டு யாரைப் பற்றியும் கவலை இல்லை தங்களின் சந்தோஷமே முக்கியம் என்று தன் அம்மாவின் முன்னாள் கூட போதையுடன் வரும் மகளாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார்.
அந்தப் பார்ட்டியில் மது அருந்தாத அந்த புதுமண தம்பதியரை மது அருந்த வைத்துவிட்டு அனைவரும் கூத்தும் கும்மாளமும் போட முடிந்து வெளியே வந்தவுடன் 4 பெண்களையும் சேர்த்து கடத்துகிறார் ஹீரோ நட்டி நட்ராஜ்.
இந்த நான்கு பேரையும் கடத்தி ஒரு ஆள் இல்லாத பங்களாவில் கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார் நட்டி நட்ராஜ்.
அவர் ஏன் அப்படி செய்தார், நட்டி நட்ராஜ் யார், என்ற மர்மங்களை உடைக்கின்றது இந்த WEB(வலை).
நட்டி நடராஜை அடிக்கடி படங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தப் படத்தில் அவரை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹாரூன்.
ஆனால் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார் நடராஜ்.
இடைவேளைக்குப் பின் ஒரு காட்சி வந்தாலும் மொட்டை ராஜேந்திரன் கைதட்டலுடன் செல்கிறார்.
முதல் பாதி படம் பார்க்கும் அனைவரையும் கிளுகிளுப்புடன் ரசிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை கதை சிந்திக்க வைக்கும்.
படத்திற்கு பின்னணி இசை இளையராஜாவின் வாரிசு கார்த்திக் ராஜா பின்னனி இசையால் நம்மை நிமிர வைக்கிறார்.
படத்தை இயக்கி இருக்கும் ஹாரோன் புதுமுக இயக்குனரைப் போல் இல்லாமல் ஐந்தாறு படங்களை எடுத்து முடித்தவர் போல் சுலபமாக இயக்கம் செய்திருக்கிறார்.
படத்தில் இரண்டாம் பாதியில் சொல்லப்பட்ட கதைக்கும் முன் பாதியில் இவ்வளவு கொடுமைகள் பெண்களுக்கு தேவையா என்பதை சற்று யோசிக்க வைக்கிறது.
ஐடி நிறுவனத்தில் அக்கிரமம் செய்யும் பெண்களுக்கு இந்த படம் ஒரு பாடம்.