• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

by Tamil2daynews
September 7, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

 

முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக #சமையல் குறிப்பு சவால் ஒன்றை அப்படத்தின் நாயகியான அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த தனித்துவமான முயற்சியை உணவின் மீதும்… விருந்தோம்பல் மீதும்… பேரன்பு கொண்ட பிரபாஸுடன் இந்த சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார்.
Imageஇதைத்தொடர்ந்து நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் ( இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த #சமையல் குறிப்பு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார். மேலும் தனது ரசிகர்களிடத்திலும் தங்களுக்குப் பிடித்த உணவையும், அதன் செய்முறையும் புகைப்படத்துடன் அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா முன்னெடுத்திருக்கும் #சமையல் குறிப்பு  சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் பிரபாஸ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே பிரபாஸ் தனக்கு பிடித்த உணவையும் அதற்கான செய்முறையையும் முதன்முறையாக விவரித்திருந்தது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்பதும், தெலுங்கு திரையுலகில் சுவையான உணவுகள் மீதும், பாரம்பரியம் -கலாச்சாரம்- பண்பாடுடன் கூடிய பிரபாஸின் விருந்தோம்பல் பண்பும் மீதும் பிரபாஸ் கொண்டிருக்கும் பெரு விருப்பம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் , அவர் தனக்கு பிடித்தமான திரையுலக நண்பர்களுக்காக அவர்களின் வேண்டுகோளை தயக்கமில்லாமல் ஏற்று செயல்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

‘வெப்பன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Next Post

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள்

Next Post

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள்

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.